பக்கம்:ஐயை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

அன்னை உடல்நலம் குன்றியதும்-சேரன்

ஆரா உளத்துயர் கொண்டுவிட்டான்! "முன்னே யிருந்த மகிழ்ச்சியில்லை-அன்னை

மொய்குழல் பற்றியே எண்ணுகின் ருர்!

என்னை யி தசம் ஒரு பெண் வரவுக்-கிவர்

ஏங்கி வருந்தும் வகையெதுவோ?

அன்னவ ளும் அன்று சொன்னதுபோல் - என்

அங்கு வரவில்லை?" என்றுநொந்தான்!

'நெய்தலைக் கண்டதும் ஒர்முறைதான்-அங்கு

நின்றுரை பாடிய தும்,நொடிதான்!

எய்திய துன்பமோ குன்றளவாய்-வந்தே

எங்ங்ணம் அன்&னயைப் பற்றிவிடும்?

மெய்தவழ் நெஞ்சில் அவள் நினைவே-வந்து

மே.வித் துயர்செய்யும் என்பதில்லை!

எய்திய எண்ணமும் ஒன்றிருக்கும்;--அதில்

என்றன் நினைவும் மிகுந்திருக்கும்!"

- என்றவன் எண்ணி வருந்தலுற்றன்!-இனி

என்செய்வ தென்றறி யாதிருந்தான்!

அன்ருெரு நாளில் அந் நெய்தலினக்-கண்டே ஆர்ந்த பெருந்துயர் கொண்டவகுய்

நின்றனன் அன்னை அருகினிலே;-அவள் நேர்ந்தது கேட்டிடத் தானழுது

மென்று விழுங்கிய வாறவனும்-வந்து

மேவிய வெம்பழி கூறலுற்றன்!

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/176&oldid=1273638" இலிருந்து மீள்விக்கப்பட்டது