பக்கம்:ஐயை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியவள் உளத்தால் மொண்டு பருகிப் "புதிதாய்ச் செய்தி ஒன்று புகல்வேன்; ஒப்பிய நின்னுளத் துறைவோன் இன்னும் முப்பது நாள்களில் வருவதாய் முடங்கல் இன்றே எழுதினன்; இதோ பார்! என்றிட: கன்றெனத் துள்ளிக் கைகளாற் பறித்து நனேவிழி ஒற்றி நடுக்குறப் பிரித்துப் புனேயா ஒவியம் போல் அதைப் படித்தாள்! கண்களில் முத்தாய்க் கண்ணிர் கழன்றது ! பண்புறு பாவை படிவமா நின்ருள்!

முதியோள் நெருங்கி ஐயையின் முகத்தை விதிர்ப்புற நீவி, 'வினே வருந்துதல் அழகிலை அம்மா: அருந்துயர் ஏ" னென "எழுதும் மடல்கள் எல்லா வற்றிலும் ஐயை யெனுமோர் அடிமைப் பேதை இருக்கின் ருளா? இறந்தா ளாவென ஒருவரி - வேண்டா - ஒருசொல் லாகிலும் எழுதா திருந்திட என்பிழை செய்தேன்? அழுகை ஒன்றே ஆறுதல்' என்று விழிநீர் பெருகிட ஐயை உரைத்ததும் "பழியிலே பெண்ணே! விளைவுருப் பையல்! நாம்படு வருத்தம் நன்கறி வானே? ஆம்பல் விழியே அழேல்"என் றடக்கி, ஆநிரை கறந்து கொட்டில் அடைத்துத்

ஐயை.

135

140

|45

150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/23&oldid=1273480" இலிருந்து மீள்விக்கப்பட்டது