பக்கம்:ஐயை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்.

'கழிந்த நாளெலாம் கண்ணிர் நாட்களே! ஒழியா நீள் நொடி ஒன்ருென் ருென் ரென ஏகிய பின்றை இருபொழு தொழிந்து போகா நாட்கள் முப்பதும் போகுமுன் 185 சாகா திருப்பினென் சாகா மருந்தை ஆகங் குளிரக் கண்களால் அருந்துவேன்’ என்று நினைத்தாள்: இருவிழி நந்ைதது!

' என்று திருமுகம் எதிர்ப்படும்? இருவரும் மன்றலிற் குந்தும் மணிநாள் என்ருே? 190 என்ற&ன அவருக் கீயுநாள் என்றே! கலையகத் தருந்திய கல்வி முற்றும் அலைமிகும் உளத்தோ டவரொடு பகிரும் திருநாள் வருமோ? என் துயர் தீருமேன்? ஒருநா ளாகிலும் உயர்ந்த தோ8ளயும் 195 அழகு முகத்தையும் அள்ளும் விழியையும் பழகு நெஞ்சையும் பார்த்துக் கொண்டே பொழுதைக் கழிப்பனே? பொல பொல வென்று பழுதமும் அன்புரை பகரு வேனே? இருகை பயன் பெற வெண்சோ றிட்டே 200 ஒருகை வழிந்திட ஆநெய் ஊற்றி அளாவி அவர்வாய்க் கன்பொடும் அருத்திக் கனவின் நினைத்ததை நனவிற் காண்பனே? தெய்வமே அவருடல் தீதுரு திருக்க மெய்யடி யானை அவருடன் பொருத்துக" 205 எனப்பல எண்ணி ஏங்கிள்ை ஐயை! நினைவால் நெஞ்சம் நிறைந்து சோர்ந்தபின் அயை உறங்கினள்; கனவொன்றலர்த்தது.

12,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/26&oldid=1273484" இலிருந்து மீள்விக்கப்பட்டது