பக்கம்:ஐயை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரிக் கொடுக்கும் வாய்மையி குளோ? சீரெழிற் குறையாச் செல்வி யாளோ? குறிப்பிலா வினே செயும் குறிப்பி குளோ? அறிகிலே னே" என ஐயை ஏங்கினுள்.

செம் மலைப் பற்றிய எண்ணம் சிலிர்த்ததும் இம்மையில் அவனுளத் தேறி வாழ்தற்கு இடத்தரா விடினும் இனிவரும் பிறவியில் திடமாய் இடம்பெறத் தெய்வம் வணங்கிள்ை!

“இந்நிலை தன்னிலும் அத்தான் என்றனே க் கொள்ளேன் என்றுரை கூற வில்லையே! தும்பை உயர்ந்தா ளாகவே துலங்குக; தம் புதுக் கேள்வற்குத் தக்கோள் ஆகுக! அத்தான் உளத்தில் அமர்ந்தோள் ஆதலின் வெற்றுப் பெண் ணு பிராள் ; குல விளக்கே ஆதல் வேண்டும் தும்பை; அவளேச் சாத லுறுமுன் காணலும் சரியே! ஒருநாள் என்றன் உயர்ந்த அன்பினைத் திருமிக வாய்ந்த தும்பையி னிடத்தே அன்பொடு கூறி, அத் தான் வாழும் இன்புறு மனையில் எனக்கோ ரிடத்தைப் பெற்றுக் கொள்ளினும் பிழையிலை; தும்பை ஒத்துக் கொள்வதே எனக்குநல் ஊழாம்! ஆனல் என்னை அடைவதில் அத்தான்

ஐயை:

620

625

630

635

650.

நான் பெறும் மகிழ்வையும் நலத்தையும் பெறுவரோ?

அறிகிலே னே' என ஐயை நினைத்தாள்.

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/49&oldid=1273510" இலிருந்து மீள்விக்கப்பட்டது