பக்கம்:ஐயை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

  "ஐயை தென்மொழி இதழில் வெளிவந்த பொழுது 
  இதனேப் பாராட்டியவர் பலர், அன்பர் சிலர் இச்சிறு பாவியத்தைப் பாராட்டி நெடிய பல பாக்களேயே எனக்கு விடுத்த்னர். அவற்றைப் படித்து, அவர்தம் அன்புள்ளத்தையும் தமிழிலக்கியச் சுவை திறத்தையும் கண்டு வியந்தேன், உண்மையான தமிழ் வேட்கை இன்னும் மறைந்து போகவில்லை என்றுணர்ந்து மிகவும் மகிழ்ந்தேன்.

மாந்தர் தம் புறநிகழ்ச்சிகளில் முகிழ்த்தெழும் பாட்டு, கதை இவற்றின் வல்லமையைவிட, அவர்தம் அக நிகழ்ச்சிகளில் குமிழ்த்தெழும் மெய்யிலக்கியங்களுக்குத் தாம் எத்துனே ஆற்றல்! "ஐயை சிறையில் மலர்ந்த செழுமலர் பெண்மையின் ஒளி நிரம்பிய உள்ள உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் உயிரோவியம். மூன்று இரவுகளில் ஏறத்தாழப் பதினெட்டு மணி நேரங்களில் வரிவடிவெடுத்த விரி வானின் முழு நிலவு ஐயை உண்மையான காதல் உள்ளத்தின் ஏற்ற இறக்கங்களே ஐயையின் ஒவ்வோர் அடியிலும் காணலாம். -

"இதனை அச்சிட்டு நூலாக்கும் பொறுப்பை, என்னிடம் விட்டு விடுங்கள் ஐயா" என்று என் வினேப்பாடுகளில் பெருந் துனே ய க இ ரு க் கு ம் திரு. பாவை. நடவரசன் என்னிடம் கேட்டார். உள்ளத்தில் ஊன்றிய பல்லாயிரம் எண்ணக் கால்களை எண்ணியும் மாணாத எனக்கு, அவ்வேண்டுகோள் ஒரு பெருஞ் சுமையிறக்க மாகப் பட்டது. எனவே மகிழ்வோடு இசைந்தேன். விரைவில் இதனை நூலாக்கியும் முடித்தார். அவர்க்கு என் பாராட்டும் வாழ்த்தும். ஒவியர் திரு. சின்னையன் என் எண்ணத்துத்தோன்றிய 'ஐயை'யை வண்ணத்துக் காட்டி மகிழ்வூட்டியுள்ளார். 'ஐயை வாழும் வரை அவர் ஓவியமும் வாழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/5&oldid=1500820" இலிருந்து மீள்விக்கப்பட்டது