பக்கம்:ஐயை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மெய்க் காதல் வாழ்வில் உய்வின்றி வெம்பிக் கசிந்து கன்னிக்கனி ஐயை’. உங்கள் அன்புள்ளத்தில் அடைக்கலம் வேண்டி உங்கள் முன் நிற்கின்ருள். அத் தாய்மைக் கொடிக்கு உங்கள் நெஞ்சையே பற்றுக் கோடாக்கி வாழ்வளியுங்கள். தமிழறமும் தாயன்பும் உங்களை வாழ்த்தும்.

கடலூர் க. அன்பன்,

சுறவம், க. தி. பி. க.க.க. பெருஞ்சித்திரன். 15-1–68.

இரண்டாம் பதிப்பு முன்னுரை 

இவ் விரண்டாம் பதிப்பில், முந்திய பதிப்பில் விடுபட்ட 717-ஆம் அடி புதிதாகச் சேர்க்கப் பெற்றுள்ளது. எனவே பாவியத்தின் அடிகள் 985 ஆனது.

பெண்மைச் சிறப்பை உணர்த்தும் இப் பாவியத்தை மகளிர் பெரிதும் விரும்பிப் படித்து வருவது மிகவும் மகிழ்வூட்டுகின்றது. விரைவில் இன் பாவியம் ஆங்கிலப் பெயர்ப்புடன் வெளிவர விருக்கின்றது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடலூர்-! -பெருஞ்சித்திரன்.

மூன்றாம் - நான்காம் பதிப்பு முன்னுரை ஐயை-மூன்றம் பதிப்பு இது. முன்னிலையில் வேறு மாற்றம் ஏதுமில்லை. ஆல்ை, பின்னிணைப்பாக திரு. ப. அ டி யார் க்கரு எளி. வணி, இ. அவர்கள் ergy #a» திறனாய்வுக் கட்டுரைகளைச் சேர்த்திருக்கின்றேன். இட மின்மையால் வேறு சில கட்டுரைகளையும் இதில் சேர்க்க இயலவில்லை. பின்னர் தனித் திறய்ைவு நூல் வெளி வருங்கால் அதில் பலர் கட்டுரைகளையும் சேர்க்கலாம். வினையழுத்த நிலையில் சில அச்சுப் பிழைகள் நேர்ந்து விட்டதற்கு வருந்துகின்றேன். திருத்தப் பட்டியின்படி முன்னர் அவற்றைத் திருத்திக் கொண்டு படிக்கக் கேட்டுக் கொள்கின்றேன்.

9ে96ঠr&gr-5 -பெருஞ்சித்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/6&oldid=1500821" இலிருந்து மீள்விக்கப்பட்டது