பக்கம்:ஐயை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயைே

மொய்க்கும் பருவத்து முத்தவாய்ச் செவ்விதழ் கைக்கும் தனிமையால் காய்வதை ஒப்பிலள்! துய்க்குநரின்றித் தோள்கள் செவிதலால் 720 தைக்கும் நெஞ்சு தவிப்பதைத் தாங்கிலள்! மோப்பா சின்றித் தூமலர் வாடியே கேட்பா சற்றுக் கிடப்பதைப் பொறுத்திலள்! நுகர்வா சற்று துடங்கிடும் மேனி பகர்வா ரிலாது படுவதைப் பார்த்திலள்! 725 திகழும் உள்ளத்துத் தெய்வக் காதலாள் மகிழும் வாய்ப்பிலா மடிவதை ஏற்கிலள்!

ஆகலின் முதியோள் ஒருநாள் அந்தியில் பாகியல் மொழியினைப் பக்கத் தழைத்துக் குழலுறப் பின்னிக் கொழுங்கொடி முல்லை 730 அழகுறச் சூட்டி அன்பே' என்ருள். செல்வியும் உரைக்குச் செவிதர, முதியோள் பல்வகைத் துன்பம் பாவைக் காகப் பிள்ளைப் பருவ முதலாப் பட்டதைக் கள்ளம் இலாமல் கழறிக் காட்டியும், 735 வளம்பல வாய்ப்பினும் மாந்த வாழ்விற்கு இளமையே சிறந்ததென் றெடுத்து நாட்டியும், பண்பினும் அன்பினும் பலப்படச் சிறப்பினும் பெண் தனி வாழ்தல் பிழையெனச் சுட்டியும்,

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/55&oldid=1273516" இலிருந்து மீள்விக்கப்பட்டது