பக்கம்:ஐயை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்.

ஆண்டுகள் ஐந்தும் ஒடின! ஐயை வேண்டுதல் வேண்டாமை விலக்கிய மனத்தொடு

நாளும் குன்றம் நாடுவாள்; நாடிக் கோளொடும் காரொடும் கதிரொடும் பேசுவாள்! இயற்கை அழகெலாம் அவளுக்கினித்தது! 85C மயற்கை சாரா மனத்தொடு மிதந்தாள்! "என்றைக் காகிலும் ஏந்திழை உசைத்தில் நின்று சுடர்விடும் அத்தான் நேரிலே வந்து தன்னை வாழ்க்கையில் அமர்த்துவான்! வெந்து தீய்த்திடும் தனிமையை வீழ்த்துவான்" 85.5 .என்றே ஐயை எண்ணி யிருந்தாள்! அன்றைய நாளும் அவள்முன் வந்ததே!

ஒருநாள் நகர்வழி ஒருவனின் உருவம் தெரிந்தது ஐயை திகைப்புற ஓடினுள்! கற்களும் முட்களும் காலில் தெறித்தே. 860 பொற்புறு பாவையின் போக்கைத் தடுத்தன! ஒடினுள் ஒடினுள் உள்ளகம் நிறைந்தோன் வாடி வருவதாய் எண்ணி ஒடினுள் உருவமும் வந்தது! ஒடினள் ஆயினும் திருவுளம் நிறைந்த தெய்வம் அ. தில்லெனக் 865 கண்டதும் கண்ணிர் கழன்றிட நின் ருள்! விண்டுரை கூரு வெய்துயர் கொண்டாள்!

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/63&oldid=1273524" இலிருந்து மீள்விக்கப்பட்டது