பக்கம்:ஐயை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்.

காதல் நுகராக் கன்னி இள மான், மாதர் தெய்வம், மங்கையர் விளக்கம் ஐயையின் நெஞ்சில் அன்னேயின் உணர்வே மெய்யொளிச் சுடராய் மிளிர்ந்தது கண்டிர்!

சிறுவன் வந்தபின் செம்மலின் எண்ணம் 976 உறுத்துதல் குறைந்தது. என்னினும் உறக்கத்து அன்னவன் நினைவும் அவளகம் மொய்த்தது! அன்ன பொழுதெலாம் அனல்மெழு காள்ை!

தோளில் மகனைத் தூக்கிய வாறு, நாளும் ஐயை குன்றம் நாடுவாள்! 975 வெந்துயர் பொருத இ8ளயோன் ஆகையால் தந்தையின் நிைைவத் தளிர்க்கொடி ஊட்டிலள்! ஆட்க்ே குட்டியோ டவன்விளே யாடிட நாட்டுவாள் அவள்விழி நகர் செலும் பாதையில் 1

என்ருே ஒருநாள் ஏந்தலும் வருவான்; 980 அன்றிலை மணப்பான்; அஆணப்பான்; என்றே ஏங்கிட நாட்களே எண்ணிள்ை! ஆனல் ஆங்கோர் உண்மை ஐயை அறியாள்! அதுகாண், செம்மலின் ஆருயிர் எதிர்ந்த படைமுகத் திறந்த தென்பதே!

( முதல் பகுதி முற்றும் )

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/69&oldid=1273530" இலிருந்து மீள்விக்கப்பட்டது