பக்கம்:ஐயை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் இனித்தது உடல்பூ சித்தது! 940 கள்ளம் இலாதாள் கனவுமெய் யானது! அத்தை சாற்றிய அரும்பெருந் தாய்மை வித்திவள் உள்ளத்தில் முளையிட்டு வளர்ந்து, பெருமர மாகிப் புடை மிக விரிந்து, சிறுமுகை பூத்துச் சிவிர்த்து மலர்ந்து, 945 நறுமணங் கமழ்ந்து, நான்கு திசையிலும் இறைத்து நிறைந்ததை ஏந்திழை கண்டாள்!

சிறுவன் உருவினில் செம்மலின் உருவை அறம்பூண் நெஞ்சின் அன்பிள்ை கண்டாள்! போதலர் தாமரைப் பூவென மலர்ந்த 959 காதல் உள்ளம் தாய்மையாய்க் கனிந்தது! வளமை கொழுவி வார்த்தெழுந் தளாவிய இளமை நெஞ்சில் இறைமையை நிறைத்தது! வேசித் தடங்கண் வேய்தோ ளிக்குமுன் பூரித்த மார்பகம் தாய்மையால் புலர்ந்தது! 955 அகனலர்ந் தாவியும் அலர்ந்துவாய் அலர்ந்து, என் மகனே' என்ருள்; ஏந்தலே' என்ருள். வாழ்விலாள் எனக்கு வாழ்வைக் கொடுத்துத் தாழ்வைப் போக்கிய தெய்வமே!" என்ருள். போற்றிப் புகழ்ந்தாள்; புதுமையால் பிறவிப் 960 பேற்றை அடைந்ததாப் பெருமிதங் கொண்டாள்! கமழ்வாய் முகர்ந்தாள்! கவினிடை நோகச் சுமந்து திரித்தாள்; கதைபல சொன்னுள்! அவனே இண்டாள்; அவனே டாடினள்! அவனெ துயின்றள்: அவனே டெழுந்தாள். 965

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/68&oldid=1273529" இலிருந்து மீள்விக்கப்பட்டது