பக்கம்:ஐயை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரகும்.

இன்புறும் மேனியை எடுத்துச் சிற்றிடை மெய்யோ டணத்துக் கனவின் மிதந்தாள்!

பொய்த்த வாழ்க்கை பொய்த்துப் போனது உலகெலா மலர்ந்து மங்கையர் உளம்படர்ந்து அலகிலா தூறிய அன்பெனும் ஊற்றுச் சேயிழை உளத்துச் சிலிர்த்தநாள் முதலா வாய்த்திடா இன்பம் சிறியோன் வருகையால் பெருக்கெடுத் தோடிப் பிறவிப் பேற்றுக்கே உருக்கொடுத் துயிரை உவகையில் தோய்த்தது!

நம்பிக்கை தந்த சிறுவனே நங்கை 'தம்பீ! உன்பெயர் சாற்றெனக் கேட்டாள்! சிமிழ்வாய் திறந்து சேரன் என்ருன்! தமிழாய் இனித்தது மழலைத் தேன்மொழி! ‘முத்தே நான்யார்? மொழிகெ'னக் கேட்டாள்! 'அத்தை என்ருன் அழகுவாய் திறத்தே! ஐயையின் விழிகளில் அரும்பியது கண்ணிர்! "உய்விலாள் என்ன்ே உன் பூ வாயால் . "அம்மா’ என்றே அழையடா கண்னே!" என்று கெஞ்சிள்ை ஏந்திழை! அவனும் செம்மா துளை இதழ் சிரித்திட மலர்ந்தே "அம்மா என்ருன் அள்ளி எடுத்தே ஆறுத லோடே அணைத்தவா றின்னும் நூறு முறைசொல், துங்குவாய் திறந்து' என, 'அம்மா! அம்மா!' என்றே அடுக்கினன்! விம்மும் நெஞ்சொடு விழிகளை மூடிக் கொந்தலர் தேன்வாய்க் குதலை மொழிந்த செந்தமிழ்ச் சொற்களை நெஞ்சினல் செரித்தாள்!

53

915

926

925

930

935

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/67&oldid=1273528" இலிருந்து மீள்விக்கப்பட்டது