பக்கம்:ஐயை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2 ஆம் பகுதி

செவந்தியோ சிறிது கற்ற

சிறியபெண்; பருவம் வாய்ந்தாள்! நிவந்தபே ரழகி யில்லை;

நிறமில்லை; எனினும் ஐயைக் குவந்ததற் ருேழி! நல்ல

உணர்வுதோய் கனிந்த உள்ளம்1 தவந்தனை யொத்த ஐயை

தனிக்காதல் திறம்.வி யந்தாள்!

சிலமுறை சேரன் வந்து

செம்மலின் வரவு கேட்பான்! சிலமுறை தும்பை எங்கே

சென்றனள் என வி எரிப்பான்| நிலவரை பெயர்தல் போல

நெஞ்சமும் துணுக்குற் றேங்க இலைமறை கிளியைக் காட்டி

எண்ணத்தை மாற்றி நிற்பாள்!

ஐயையும் செவந்திக் கத்தை

அன்பினைச் சொல்வாள்: பெற்றேர் எய்யாத குறையைத் தீர்த்த

ஏற்றத்தைச் சொல்வாள்; தானும் பொய்யாத காதல் நெஞ்சைப்

புரையிலான் தன்மேல் வைத்து நையாமல் நைந்து போன

நயமிலாக் கதையும் சொல்வாள்!

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/80&oldid=1273541" இலிருந்து மீள்விக்கப்பட்டது