பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


யோடு அனுப்பி கை:த்தான். ரவிவர்மனும் வீரபாண்டியனும் தோற்றோடினர். சுந்தர பாண்டியன் வீரத் தலைவன் பட்டினத்தில் மணிமுடி சூடினான்.

மாலிக்காபூர்

ஆயினும் வீரபாண்டியன் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சி செலுத்தி வந்தான் என்பது மாலிக்காபூரின் படையெடுப்புக் காலத்தில் அவனிடமிருந்து ஏராளமான செல்வத்தை டில்லி ராணுவம் பறித்துக் கொண்டு சென்றது என்று சமகால முஸ்லிம் ஆசிரியர்கள் கூறுவதிலிருந்து தெரிகிறது. சுந்தரபாண்டியன் போரிடாமல் பதுங்கிக் கொண்டு செல்வத்தையும் காப்பாற்றிக் கொண்டானென்றும், அவனுடைய மாமன் விக்ரமபாண்டியன் பெரும் படை சேகரித்து வந்து மாலிக்காபூரை தோற்கடித்து விரட்டியடித்தான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்குள்ளாகவே ஒரே காலத்தில் நாம் மூன்று பாண்டியர் களை பற்றிக் கேள்விப்படுகிருேம். விக்ரமன் வீரபாண்டியனையும் சுந்தரபாண்டியனையும் ஒன்று படுத்தி, மாலிக்காபூரை விரட்டியதைப் பற்றிப் பல சரித்திராசியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மாலிக்காபூர் டில்லி நோக்கித் திரும்பியதும் சகோதரச் சண்டை முதிர்ந்து விட்டது. 1311ல் அவன் மறுபடி திரும்பினான். கொள்ளையடித்துச் சென்ற பொருள்களைக் கண்டு ஆசை கொண்டு மீண்டும் கொள்ளையடிக்க டில்லி சுல்தான்கள் அவனை யனுப்பினர். அவன் வீரபாண்டியன் அரசு வீற்றிருந்த காஞ்சி நகரையும், சுந்தர பாண்டியன் அரசு வீற்றிருந்த மதுரை நகரையும் கொள்ளையடித்து விட்டு ராமேசுவரம் சென்ருன். அங்கே புள்ள புராதனக் கோயிலை இடித்து அதன் செல்வத்தை கொள்ளை கொண்டு டில்லிக்கு பயணமானான்.

அவனே மதுரையில் ஒரு பிரதிநிதியை நியமித்துச் சென்றான் என்று மதுரைத் தல வரலாறு கூறும். ஆனால் அது உண்மையல்ல வென்றும் 1323ல் தான் கியாஸுத்தின் துக்ளக் அனுப்பிய படை மதுரையைக் கைப்பற்றியது என்று கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார், சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி மதுரையில் ஆட்சி புரிய நியமிக்கப்பட்டான். இப்பிரதிநிதிகளின் ஆட்சி 1323 முதல் 1334 வரை நடைபெற்றது. 1334ல் ஜலாலூதீன் அசன்ஷா டில்லி சாம்ராஜ்யத்தின் மேலாதிக்கத்தை உதறியெறிந்துவிட்டு தானே சுதந்தர சுல்தான் என்று பிரகடனம் செய்து கொண்டான்.