பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

 ஸிராஜ் அபீப் என்ற முஸ்லீம் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார், இவன் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய அரிகரன், புக்கன், என்ற இரு சகோதரர்களுள் இளையவனே என்று பேராசிரியர் திருவேங்கடாச்சாரி, 'மதுரா விஜயம்' என்ற நூலின் முகவுரையில் கூறுகிறார்.

3. குமார கம்பணன்

மூன்றாவது, மதுரை மீது படையெடுத்த கன்னடிய இளவரசன், மேற்குறிப்பிட்ட புக்கதேவனது மகன் குமார கம்பணன் உடையாராவான் இவன் மதுரையின் கடைசி சுல்தானாயிருந்த மூபரக் என்பவனே 1371ல் தோற்கடித்துக் கொன்றான். அவனுடைய வெற்றியைக் குறித்து அவனது மனைவியார் ஶ்ரீ கங்கா தேவி 'மதுரா விஜயம்' என்ற பரணி நூல் பாடியுள்ளார்.

இக்காலத்தில் மதுரையிலும், மதுரையின் சுற்றுப் புறங்களிலும் பாண்டியர் கல்வெட்டுக்களோ, காசுகளோ கிடைப்பதில்லை. ஆனால் தென் தமிழ்நாட்டில் பலவிடங்களில் தென்காசி, கரிவலம் வந்த நல்லூர் பாண்டியர்களின், கல்வெட்டுகளும் திருநெல் வேலிப் பாண்டியர்களின் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. "கம்பண உடையார் வடதிசையிலிருந்து வந்து மதுரையில் அமைதியை நிலைநாட்டினர்” என்று மாறவர்மன் பாரக்கிரம பாண்டியன் சாசன மொன்று கூறுகிறது. எனவே மதுரையில் சுல்தானிய ஆட்சி முடிகிற காலத்தில் வீரபாக்கிரம பாண்டியன் என்ற பாண்டியர் வழித்தோன்றல் தென்பாண்டி நாட்டில் அரசு செலுத்தி வந்தான் என்று விளங்குகிறது.

தென்காசிப் பஞ்ச பாண்டியர்

இப்பாண்டியன் 1340 முதல் 1380 வரை ஆட்சி செலுத்தினான். அவனுடைய சாசனங்களில் தன்னை விஜய நகராட்சிக்கு உட்பட்ட சிற்றரசன் என்று அவன் கூறிக் கொள்ளவில்லை. அவனுடைய பரம்பரையினர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு சுதந்திர மன்னர்களாகவே ஆண்டு வந்தனர். 1370 முதல் 1422 வரை ஐந்து பாண்டியர்கள் தென்காசியிலிருந்து தென் பாண்டி நாடு முழுவதையும் ஆண்டுவந்த செய்தி அவர்களுடைய சாசனங்களிலிருந்து புலனாகிறது. அதன் விஸ்தீரணத்தை அவர்களுடைய சாசனங்கள் தெற்கே கோட்டாறிலும், வடகிழக்கே திருப்பத்தூரிலும் வடமேற்கே கரிவலம் வந்த நல்லூரிலும்