பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மேற்கே குற்றாலத்திலும் கிடைப்பதே அளவிட்டுக் காட்டும் அவர்கள் பழங்காலப் பாண்டியர்களின் பட்டங்களான கோமாறன் ஜடிலவர்மன் என்பவற்றை மாறிமாறிச் சூட்டிக் கொண்டனர். இவர்களனைவரும் சுதந்திர மன்னர்கள் என்பதை இவர்களுடைய சாசனங்கள் அனைத்தும் காட்டும். இவர்கள் ஒருவருக்குப்பின் ஒருவர் ஆண்டனரா, அல்லது இருவர் மூவர் ஒரே காலத்தில் பல தலைநகர்களிலிருந்து, ராஜ்யத்தைப் பிரிவு செய்து கொண்டு ஆண்டனரா என்பது நமக்குப் புரியாத புதிராகவே உள்ளது. இவர்களது பெயர்கள் :

1. கோமாறன் வீரபாண்டியன்.

2. கோ. ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன்.

3. ஜடிலவர்மன் குலசேகர பாண்டியன்.

4. ஜடாவர்மன் விக்ரம பாண்டியன்.

இவர்கள் புகழ்பெற்று விளங்கியதோடல்லாமல் நீண்ட காலம் ஆட்சி செய்தார்கள். இவர்களைப் பஞ்ச பாண்டியர் என்றும் சகோதரர் என்றும் அழைக்கும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். கதைப்பாடல்களும் மூத்த சகோதரனை குலசேகர பாண்டியன் என்றே அழைக்கின்றன.

பராக்கிரம பாண்டியன்

அரிகேசரி பராக்கிரம பாண்டியன் 1371 முதல் 1422 வரை 50 ஆண்டுகாலம் தென்காசியில் ஆண்டான் அவனது சாசனங்கள் மிகப்பல. அவனே தென்காசிக் கோவிலைக் கட்டியவன். சிறந்த தமிழ்ப் புலமையும், கவித்துவ சக்தியும் வாய்ந்தவன். அவனுடைய சாசனங்களில் தன்னைப் பழைய பாண்டியர் குலப்பட்டங்களாலேயே வருணித்துக் கொள்கிறான். அவன் விஜய நகரத்துகுட்பட்ட அரசனல்லன் என்பது அவடது சாசனங்களால் விளங்குகிறது. இவனது காலமும் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலமும் ஒன்று.

கன்னடியர் படையெடுப்பு

4. நரச தாயக்கன்

1485-ல் சாளுவ நரசிம்மன் ஹரிஹரனுடைய பரம்பரையை அழித்துவிட்டு தனது தளபதி நரச நாயக்கன் உதவியால் ஆட்சியைக் கைப்பற்றினான். வடக்கே வலிமை பெற்றிருந்த