பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலுடைந்து நாலு திக்கும் கடல்கள் பரந்தாற் போலே அடல் படைத்த பாண்டியர் ஐவரவர் ராசாக்கள் படை ஆக மெல்லா மிகச் சினத்து அடர்ந்து போர் செய்யவென்று திடு திடென ஒடிப்படை சென்று முன்னே யுடைக்குதுகாண் கன்னடியன் குளங்கரையும் கற்பனை சொரி ஐயப்பன் கோவிலும் மன்னவர்கள் பெரும்படைதான் மயிலாடும் பாறையுமாய் ஏழானே கொண்ட ஐயன் இணையடியைப் போற்றி செய்து 4370 தாளாமல் பொருத படை சன்னல் பின்னலாகுதடா 3. சீர் சிந்து ஐவர்க்கும் மடையடைக்கப் போகாதென்ன அரசன் பெரும்படையை அடர நெருக்கவே இருவரு மெதுக்கவே யாவரும் நடத்தவே இரண்டுங் கலந்து வெட்டிப் புரண்டு மடியவே வட்ட மிட்ட தூசியிலே வார குதிரை தன்னே வளைந்து சிலரை வெட்டி களத்தில் மடியவே தளத்தில் மடிந்து சிலர் தடியுமாருங் கொள்ளவே ஒட்டாபட்டுத் தலை கொட்டி முட்டி போலுருள ஒட்டைெரு தண்டேரியும் குட்டமண் வெட்டிக்காரர்களு! 4380 ஒதுங்கி வடுகிச்சி மலையை நோக்கி யோடவே மதுரை வெட்டு மாறனும் வல்வேல் மாறனும் மலேயைக் குடைய வெட்டு மருப்புலி மாறனும் மங்கைப் பெருமாளுடனே சிங்கப் பெருமாளுமாய் குதிரை விட்டுக் குத்தியே குடல்மாலை சூடிடுவார் கூட்டப் புலி தன்னைக் குத்தி மாட்டுப் புவிபோலே தாண்டிக் குத்துவார் சிலர் ஒண்டிக்கிடப்பார் சிலர் சரங்கள் பட்டுப்பருத்த மரங்களென விழுவார் மண்டிப் போட்டிருந்து வெட்டி மடிந்து விழுவார் சிலர் மடையுங் குளங்கரையும் படையும் பிணமாகவே 4330 குளத்துக் கலைமாரு கொண்டு சென்று போட்டாப் போலே கோடிப் பெரும்படையைக் கொண்டு வந்து கன்னடியன் தளத்திலகப்பட்டுத் தரிப்பு மாருங் கொள்ளவே கூட்டப் பெரும்படையைக் கொண்டு வந்து கன்னடியன் 4270-சன்ன பின்னல்-சின்ன பின்னம் (நெல்லை பா. வ) -பொருள் விளங்கவில்லை - 4279-தண்டேரி - தண்டியல் என்னும் பல்லக்கு ஏறி. அதிகாரி