பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 எழுந்தருளி விட்டார் இளைய பெருமாளும் அந்த நேரம் கண்டு நின்ற ஒட்டன் ஒடி கோட்டைக்குள்ளே அப் பெரிய குலசேகரன் அண்டையில் சென்றே சொல்வான் தெற்குக் கோட்டை வாசலிலே கன்னடியன் சேனை வந்து செஞ்சயன் தொண்டமான வெட்டியே இழுத்து கொண்டு, விலக்கிக் கொண்டு சேத்துக் கொண்டு மந்திரியை மீண்டு கொண்டு வாரநேரம் மட்டில்லாத் திண்புயனே குலசேகரப் பெருமாளே மருமகனும் குண்டுபட்டு மடிந்து விட்டாரெனவே 4670 மடிந்து விட்டாரென்ற வார்த்தை தன்னைக் கேட்ட போது முடிந்ததோ தென்னருட வங்குசம் எல்லாமெனவே முகத்திலறைந்து கண்ணிர் திருமுகத்து விழத்தட்டி கண்மணி போலே எந்தன் மருகன் பட்டுக்கிடக்க கண்டு கொண்டு கோட்டைக்குள்ளே இருப்பேனே என்று சொல்வி மன்னுலகை யாண்டிருந்த குலசேகரப் பெருமாள் வன்னப் பரியேறி பொன்னிட்ட வல்லயம் வாங்குவனும் (வேறு) பொன்னிட்ட வல்லயம் புகழ் பெத்த வல்லயம் பொன்னின் பெருமாள் தம் கையில் வல்லயம் சள்ளை பெத்த வல்லயம் மன்னர் கொண்ட வல்லயம் 4680 சத்துருக்களை குடல் சரிக்கும் வல்லயம் கொல்லாதிருக்குமா அவர்கள் உயிரை வல்லயம் வெத்தி மாலை சூடுவார் அவர் கையில் வல்லயம் செல்லும் செல்லும் காண்பவர் கையில் வல்லயம் செல்லாதிருக்குமோ திருக்கையில் வல்லயம் வல்லயத்தைத் திருக்கையில் வாங்கியே எல்லையத்த சேனையோடே செல்லவே வாசல் தோறும் செல்லுகின்ற படையெல்லாம் சேர வாரும் என்றளவிட்ட போதிலே வேறு நல்ல நல்ல தென்று சொல்லி திரு நீலகண்டனெட்டன் 690 பதியிைரங் குதிரை அரபியர் தொடர 4671 வங்குசம்-வமிசம் (பா. வ, நெல்லை) 4679 பெத்த-பெற்ற 4681 வல்லயம்-ஈட்டி போன்ற ஆயுதம் 4883. வெத்தி-வெற்றி