பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுண்ணக் குறியிட்டுத் திரும்பி வந்தான் கர்த்தன் பாண்டியன் கோயில் காலை சென்றான் கதிரோன் உதயத்தைக் காட்டினனே உதய வேளையில் தளகர்த்தரும் ஊரில் துரைமக்கள் ராகுத் தரும் 610 பதினெட்டு நாட்டு ராணுவத்தார் பக்கமிருபுறம் சேவிக்கவே, - மூத்த மந்திரி தன்னையழைத்து மொழிந்தான் பாண்டியன் அருகிருத்தி "கர்த்தன் காலத்தில் விளைவில்லையே காலமாரிகள் பெய்த துண்டோ? தேசம் திசை மன்னர் கொள்ளையுண்டோ? செங்கோல் வழுவாமல் நடக்கிறதா? பேசும் வார்த்தைக் கேட்டிருந்து பின்பு காளிங்கன் எடுத்துரைப்பான் 620 அரசர் கற்பனை யல்லாமல் அதனமாய் ஒன்றும் நடக்கவில்லை” வினய மந்திரி உரைத்த பேசது வேந்தன் ஒட்டன் முகம் நோக்கி "கங்குல் குறியிட்ட வீட்டினாளை கடுக வரச் சொல்லிக் கண்ணைக் காட்டி மங்குல் விடிந்த பின் ஒட்டன் சென்று மன்னன் சமூகத்தில் வருவாய் என்றான் பொள்ளல் வீட்டிலே பிணங் கிடந்தால் புகுந்து நாய் நரி பிடுங்காதோ? 630 வள்ளல் எந்தன் மேனி தன்னை மறைத்து வருக வோர் சீலையில்லை இந்தக் கோலத்துக் கண்ணீரோடே எந்தப் படியங்கே வருவேன் என்றாள்

  • கோதுங் குழலாளே அழவேண்டாம்

கூட வரும் போது குறை யொன்றில்லை பட்டப் பாயிலே பிணஞ்சுருட்டு இடிந்த கதவையும் எடுத்துச் சாத்தி ஒட்டனுரைக்கும் வார்த்தையிலே உள்ளம் பத்தியே உடனே போனாள் 640 கூட்டத்துரை மக்கள் சமூகத்திலே குல சேகரன் தன்னைத் தொழுதனளே இட்டும் பெண் கொடி முக நோக்கி இரவிலே என்ன சொல்லி யழுதாய் " என்றான். 33 தங்கள் இரவில்,