பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

இதனால் போர் தொடங்குகிறது. குலசேகரனைப் பிடித்துத் தன் மகளுக்கு மணம் செய்து வைக்கத்தான் கன்னடியன் விரும்புகிறான் அவனது நோக்கம் நிறைவேறுகிற நிலையில் குலசேகரன் வைரம் தின்று உயிர் நீத்து விடுகிறான். இதற்குக் காரணம் தனது சகோதரர்களைப் போரில் கொன்ற பகைவனது பெண்ணை மணந்து கொள்ளக் கூடாதென்று குலசேகரன் நினைப்பதே. கன்னடியன் மகளது முடிவும் விளைவும் இந்தியக் காவிய மரபின்படி கன்னடியன் மகள் கற்புடையவளாகக் காட்டப்படுகிறாள். தலைவன் வீரனாகவும், தலைவி கற்புடையவளாகவும் இருத்தல் இந்தியக் காவியமரபு. இதற்கேற்ப குலசேகரன் இறந்ததையறிந்து அவனுடலுக்கு மாலையிட்டு அவனது சிதையில் ஏறி எரிந்து உயிர்விடுகிறாள் கதைத் தலைவி. குலப்பெருமையால் பிரிந்து போரிட்ட இரு குலங்களே, தனது உறுதியாலும், தியாகத்தாலும் ஒன்றாக்கி விடுகிறாள் கன்னடியன் மகள், இரு குலங்களும், இரு ராஜ்யங்களும் ஒன்றுபட்டு பொதுப் பகைவர்களான பாமினி சுல்தான்களை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வை கதாநாயகி இறந்தவனுக்கு மாலையிடும் நிகழ்ச்சியும், அவளது இறுதித் தியாகமும் எழுப்புகின்றன. மூலங்களின் இணைப்புகள் இக் காதல் கதையோடு தொடர்பில்லாத பல நாட்டுப் புனை கதைகளை கோட்டையும், போரும் இணைக்கின்றன. முக்கியமான கதை கன்னடியன் மகளின் காதலும், அதன் மறுப்பால் ஏற்பட்ட போருமே. இதனோடு தொடர்பில்லாத கதைகளான குலசேகரன் பிறப்பு, பாடும் பரசிகதை, கோட்டை கட்டிய கதை, வீணாதி வீணன்கதை, இடைச்சிக் கதை முதலியன மிக நெகிழ்வாகத்தான் முக்கிய கதையோடு இணைக்கப் பட்டுள்ளது, இடமும் காலமும் தொடர்பு பெறுதல் கதாநாயகன் பிறப்பு முக்கிய சம்பவமாகக் கருதப்பட வேண்டியதால் அதற்கென ஒரு கதையையே கதைப்பாடலி அமைத்திருக்கிறார்கள். குலசேகரன் மணமானவனாக,இருப்பதாலும் கதையில் கன்னடியன் மகளைக் காதலிக்காததாலும் ஒரு காதல் கதையை கதாநாயகனுக்காக புணைய வேண்டியிருந்தது. அது தான் பாடும் பரசிகதை. இக்கதை க்கு ஆதாரமாக வரலாற்று