பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29

நிகழ்ச்சியொன்றிருந்தது என்பதை தேசிக வினயகம் பிள்ளையவர்கள் நிரூபித்துள்ளார்கள். இந்த வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில்தான் பாடும் பரசிகதை புனையப்பட்டடுள்ளது. வள்ளியூரில் தான் கோட்டை கட்டப்பட்டதும், முற்றுகையிடப்பட்டதும், அழிந்ததும். எனவே பாடும் பரசி கதையின் நிகழ்களனான கோட்டையிலிருந்து வள்ளியூருக்கு நிகழ்களனை மாற்ற வேண்டியுள்ளது. இதற்காகத் தான் வேட்டையும், நாய்-முயல் கதையும் புனையப்பட்டன. கோட்டை கட்டுவதற்குக் காரணம் ஏற்பட்டபின் கோட்டை கட்டிய விதம் வருணிக்கப்படுகிறது. அதன்பின் கோட்டையில் நடந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன கோட்டை கட்டுமுன் நிகழ்ச்சிகள் மதுரை, காஞ்சி, கோட்டாறு ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன, இவற்றை தொடர்பு படுத்துவது குலசேகரனது பயணங்கள். ஒவ்வொரு காரணத்தால் அவன் காஞ்சிக்கும் கோட்டாற்றிற்கும் செல்லுகிறான், இதற்குப் பிறகு தான் கதையின் முக்கிய நிகழ்ச்சியின் ஆரம்பம் வள்ளியூரில் நிகழ்கிறது. பண்டாரங்கள் படமெழுதிய சம்பவம் அது. இவ்வாறு பல நாட்டுப் புனைகதைகளையும், வரலாற்றுச் செய்தி களையும், வரலாற்று நினைவுகளையும் இணைத்து ஒரு நாட்டுக் கதைப்பாடலைப் படைத்திருக்கிறார்கள் நாட்டுப்பாடல் கவிஞர்கள். பெரும்பாலும் இக்கதைப் பாடல் குமரிமாவட்டத்தில் பாடப் பட்டதாகத் தெரிகிறது. நெல்லை.மாவட்டத்தின் தென் பகுதியிலும் பாடப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இக்கதைகளில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுக் கடைசியில் சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட போது முடிவான வடிவம் பெற்றது. இக் கதைப்பாடல் இப்பொழுது வில்லுப்பாட்டாகப் பரவலாகப் பாடப்படுவதில்லை. அகஸ்தீசுவரம் பக்கத்தில் ஐவர் ராசாக்கள் கோயிலிருப்பதாகவும் அங்கு பாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொழுது 20 ஆண்டுகளாக விசேஷங்கள் நடைபெறாத காரணத்தால் இப்பாடல் பாடப்