பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நண்டிலும் கடிதாயோடி
நத்தை சென்றெதிர்ப்ப தொக்கும்
புண்டரீகப் பூக் கிணையாக
30எட்டிப்பூ பூப்பதொக்கும்
வண்ணமாத்துக்கு இணை
செம்பு சரி என்பதொக்கும்
சாரி வரும் யானை முன்னே,
பூனை சென் றெதிர்ப்ப தொக்கும்
மன்னர் பாண்டியர் கதையை
இயம்பிடுவேன் என்பதெல்லாம்
பல் நாமப் பல்கலையும் ஆய்ந்த தமிழ்வாணர் முன்னே
இராசர் ஐவர் கதைபாட
நாட்டுக்கதைப் பாடலுக்கு
40பொருளும் தமிழுரையும்
இம்மியும் இல்லாதடியேன்
பிரியத்தினால் தொடுத்த
சொல்லுரை எதற்கு ஒக்கும்?
கருப்பஞ்சாறு காய்ச்சிச் சேர்த்த
கட்டிச் சக்கரைக் கிணையாய்
வெட்டி வேப்பம் பிசினை
கட்டி, வட்டாகச் சேர்த்து
பொய்ம்மை பேசியே ஒருவன்
சர்க்கரைக்குத் தண்டி என்றும்
50 நிறை போட்டு வெள்ளிக் கோலால்
அதை நிறுப்ப தாக்கும்.
நிறுத்தானே யோட்டை வைத்து
உள்ள மாத்துப் பொன் தனக்கு
நீக்க மறையாமல் காக்காய்ப்
பொன்னைச் சரியென்ப தொக்கும்
கறுத்த கவரி மயிர்
முடிக்குதந்த செம்பட்டை மயிர்
கண்டு கறுபடு பத்தி மாதர்கள்
கொண்டையை முடிப்ப தொக்கும்
60மாறன் மரக் காவிலுள்ள
சந்தன மரந்தனக்கு
வண்டாளையும் ஆல மாமரம்
வாசஞ்ரியென்ப தொக்கும்.

31 வண்ணமரத்து - உயர்ந்த மாற்றுத்தங்கம்
33 சாரி வரும்-- நகர்வலம் வரும்
40 "தண்டி" (நெல்லை வழக்கு) பெரிய கட்டி