பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ஈடு செய் வேனென்ற புலி
தானெழும்பி பாயக் கண்டு
ஈப்புலியுஞ் சென்றெழும்பித்
தானும் பாய்வே னென்ப தொக்கும்
நாடி நான் தொடுத்த கதை
புன் சொல்லுரை நல்ல தென
70நத்தமிழ் நூல் கத்தவரும்
குத்தம் பொறுத்தாண்டு கொள்வீர்
ஆண்டுலகத்தே நடந்து
பாண்டி மன்னர் வள்ளியூரில்
அன்று வெட்டப்பட்ட கதை
யென்று படை வேட்டையாட
வேண்டு வண்ணந் தாளென்னை
யாண்டு வளத்தடிமை கொண்டு முங்கள்
வித்துவானானெனச் சொல்லி
வல்ல கவி பாட வைத்த
80வட்ட கூர்மை கட்டு முகனை
இட்ட இட்ட வன்னந் தீராய்
சேர்த்த செந்தமிழுரையும்
செந்திலவன் வேலினையான்
சீர்பாத மெந்தனுட
சிரத்தில் கருதிக்கொண்டேன்
கருத்தும் பல கலையும்
காவியஞ் சீர் தலையுஞ்
கவியுமுரிய சொல்லும்
கண்டே யலங்காரமும்
90வருத்து முலகளந்த பெரு
மாளிரு பாதத்தை
வஞ்சமின்றி யெந்தனுட
வாக்கிலும் மனதிலும் கொண்டேன்
தேனுலாவும் மாலை மார்பன்
செந்திலாதிபன் வேலினையான்
சிந்தை மகிழ்ந்தன்புடனே
வந்ததோர் பெத்த பெருமாள்
 
56 ஈப்புலி - சிறிய பூச்சி வகை . புலிக்கு போட்டியாக ஈப்புலி பாய்வதொக்கும்
70 கத்தவரும் - கற்றவரும் (நெல்லை வழக்கு)
90 முதல் 92 "திருமால் பாதத்தை மனதிலிறுத்திக் கொண்டேன்" என்று கூறுகிறார்.