பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

திருமாலுக் கபிஷேகங்கள் மணி தீபம்
சிவ பூசை திருநாளும் மடைவாய் நடத்தி
அடைவான மாதான கோதானமுடனே
அன்ன தானம் பூமி தானம் தர்மங்கள் செய்து
நலமாக உலகு தனிலே நேரியதாக
30இட்டுண்டு ஆறிலொன்று கடமை கொண்டு
கடவாத அலைவந்து பல பூசை செய்ய
காவலர்க்குப் புதல்வர் வந்து பிறவாமல்
நடமாடும் அம்பலவர் திருவருளு மிதுவோ ?
நாடினார் ஆடினார் ஒடினார் மன்னர்.
ஒடிமனஞ் சலித்து, அரசரப்போ
தேடி மகிழ்ந்து கண்டார் ஒரு சோதிரியை
சென்று அங்கரசனைத் தொழுதென்ன சொல்லுவான்
'வாடி முகம் சாம்ப வேண்டாம்
மக்கள் பிறந்திட மதிசொல்லக் கேள்
40ஆடுமயிலாடும் வைகைக் கரையில்
அம்மை பகவதி திருக்கோயில் தன்னில்
தன்னை நிகரில்லா மன்னவா உந்தன்
தையல் தவமிருந்திடில் இப்போ
எந்நிலமும் ஒரு குடைக் குள்ளாக

ராசப்பெருமாள் வந்தவதரிப்பார்.”
(என்றான்)

சொன்னமொழி கேட்டு மன்னர் பெருமாள்
துக்கமது தீர்ந்து மனமகிழ்ந்து
மின்னிடையாள் மாலையம்மை தன்னை
விரையத்தவத்துக்கு இருக்கச் சொன்னார்

25நாட்டுக்கதைப் பாடல்களில் சமயநெறி அதிகமாகக் காணப்படுவதில்லை. அரசர்கள் சிவபூசை, தேவிபூசை செய்தது போலவே திருமாலுக்கு அபிடேகங்கள் நடத்தியதாக இவ்வடி கூறுகிறது.
26அடைவாய் - முறைப்படி
27மாதானம் - மகாதானம்
30 34 நீதியோடு அரசாண்டு வந்த பாண்டிய மன்னன் ஆறிலொரு கடமைதான் பெற்றுக் கொண்டான். அலைகள் கரை வரை வந்து கரையிலுள்ள கோயிலை வணங்கிி மீளுகின்றன. அலைகள் விதிபிறழாமல் இயங்குகின்றன. அரசனும் செங்கோல் பிறழாது அரசாண்டான், ஆயினும் அவனுக்கு மக்கட்பேறில்லை என நாட்டவர் வருந்தினர்.
35 37 பாண்டி நாட்டுச் சிற்றரசர்கள் தேடிப்போய் ஒரு சோதிடனைக் கண்டார்கள். (சோதிரி - சோதிடன்)
38 45 சோதிடன் சொல்லும் சோசியம் .
49 விரைய - விரைவாக (விரைசா-நெல்ல வட்டார வழக்கு)