பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

50 இருக்கும் படியந்த மாலையம்மை
எழுந்து மடவார்கள் புடை சூழ,
கருப்புக் குழல் மங்கை தீர்த்தமாடி,
வண்ணப் பட்டுடுத்தி நீறுஞ்சார்த்தி,
ஒரு காலத்துண்பதும் நோன்புமாக
உறைப்பாய் வசனத்துக் கெனச் சமைந்தாள்.
திருக்கோவில் கட்டிப் பகவதிக்கு
திருநாள் நடத்தியே பூசை நடத்தி
பூசை நடத்தியே புதல்வனுக்காய்
பொன்னுங்குழவிகள் சமைத்து வைத்து
60வாசக்குழல் மங்கை மாலையம்மை தான்
மங்களமதாகுமென்று வசன முற்றாள்.
உத்த வருததங்கண்டம்மை தானும்
உகந்து திருமணங் களி கூர்ந்து
அத்தாரத் திங்கள் கணபதிபோல்
அரசன் திருத்தேவி முன்பு சென்று
புத்தி வருந்தாதே மாலையம்மா
புதல்வன் அரசாள விதியுண்டென,
கொத்துமாலை தீர்ந்தம் திருநீறுடன்,
70கொடுத்தாள் இலுமிச்சம் பழமும் கையில்
கையில் சிறப்பேற்று மாலையம்மை
கமலத்திருத்தாள் தலத்து வீழ்ந்து
வைகைக் கரையம்மை மகிழ்வு காட்டி,
நிறைந்தாள் மாலையம்மை எழுந்திருந்தாள்.
உய்யும் படி கண்ட கனாத்திறத்தை
உடனே அரசனுக்குரைத்தனளாம்.
உரைக்க மனமகிழ்ந்து அரசனப்போ,
உண்மைப் பொருள் கண்ட கனா நமக்கு
இரைத்த பரிவாரம் புடை சூழவே
80 எழுந்தங்கிரு பெருங் கோயில் புக்கார்
விரைத்தார் குழல் மங்கை மாலையம்மையும்
வேந்தன் பெருமாளும் பள்ளியறையில்

50 55 மக்கட்பேறு வேண்டி மாலையம்மை தவமிருக்க முன் வநதாள்.
60 61 மாலையம்மை வசனமிருந்தாள். வசனம் - நோன்பு (நெ. வ. ப.)
61 74 மாலையம்மை தவமிருப்பது கண்டு வைகைக் கரையம்மை மனங்கனிந்து கணபதி உருவத்தில் வந்து திருநீறும், மாலையும், எலுமிச்சம் பழமும் பிரசாதமாக அளிப்பது போல கனவு கண்டாள். கனவில் தன்னைப் பார்த்து கணபதி பிள்ளைப் பேறுண்ளென்று சொல்வதாகவும் காதால் கேட்டாள்.