பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

அறைத்த சந்தனம் பன்னீர் சவ்வாது
அணிந்தார் திருமார்பில், புணர்ந்திருந்தார்.
புணர்ந்தங்கொரு நலம் இருநலமாய்
புதல்வன் பகவதி பொருட்டினலே
மானந்த குழல் மங்கை திருவயத்தில்,
மன்னர் பெருமாள் வந்தவதரித்தார்,
90தரித்தார் கருக்குழியில் பனித்தாரை போல,
சலமும் உதிரமும் திரண்டிடுமாம்
குருத்தை இரு ரூபமாக்கி
கொண்டு வரும் அந்த நாளையிலே,
பெருத்த முலைக்கண்கள் பசலை பூத்து
பெண்மை நலம் குலைத்து அன்னம் மறந்தாள்.
விரித்த தலை முந்தி தரைக்கிடையும்,
மேனி சருகாக கூந்தல் சடையாம்
சிரித்த முகத்தொடு பஞ்சணை மீது
சென்றங்கரசனோடு உறவுமாடி,
100வருத்தமாய் சத்துவாய் நீர்பாயும்.
மசங்கி விழுந்தும் எழுந்திருப்பாள்.
சொந்தத் தாதியர் மூப்பியர்கள்
எடுத்துப் பலபண்டங் கொடுத்திடுவார்.
குளிர்ந்த திருமுக மாலையம்மைக்கு
கொண்ட நாலும் அஞ்சு மாதமாச்சே,
தெளிந்தார் திரு மன்னர் பெருமான்
தெய்வ பூசை குரு பூசை நடத்தி
பூசை நடத்தியே ஏழாமாசம்
பொங்கு வளையிட வேணுமென்று
100தேசத்தார்க்கும் மந்திரிமார்க்கும்
சென்று சோபனம் ஒட்டன் சொல்லுவானாம்

வேறு


சொல்லுவார் அரசர் முன் சோதிடர் தொழுது நின்று
சுகமான நாளும் முகிழ்த்தமும் வல்ல பல மாதமும்
மாலையம்மை திருவயிறு வாழவே களிகூர்ந்து அந்நேரம்

95 101 நாட்டுப்பாடல் முறையில் மாலையம்மை பிள்ளைத்தாய்ச்சியான பின் அவளுடலில் காணப்படும் மாறுதல் விவரிக்கப்படுகின்றன. இதுபோலவே கருப்பமான தலைவியர் நிலை வேறு பாடல்களிலும் விரிவாகக் கூறப்படும்.
மாதாமாதம் உடலில் ஏற்படும் மாறுதல்களையும் அப்பொழுது வழக்கமாகச் செய்யும் சடங்குகளையும் 101 முதல் 111 வரையுள்ள அடிகள் வருணிக்கின்றன.
112 சீமந்த முகூர்த்தம் நடைபெறுவதற்கு முன் நிகழ்ந்த சிறப்புக்கள்