பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


வேறு


இருந்த ராசகுல வல்வி மானை
யெழுந்தருளி மாதர்கன் சடங்கு செய்யவேதான்
விரித்தமலர் மாமலர் காவனத் தோடே
மெல்லியலாள் மாலையம்மை முன்னே நடந்தாள்.
சிறந்த புகழ் மங்கையர்கள் வெஞ்சாமரை வீச
தண்டைகள், சிலம்புகள் தகுதி யென நடந்தார்.
முருந்து நகை மங்கையர்களாட இசைபாட
150மோக மணி தாளமிடை மேளமது இயம்ப
இயம்பு மறைமங் கலங்களிரண்டருகம் வாழ்த்த
ஏழு திசை ஓசை குழல் வாசனைகள் பாட
நயம் பெறு வலம்புரி சலஞ்சலென முழங்க
நாவலர்கள் பாட மஞ்ச பூவை களிமேவ
பயன் கள மணிமேகலைகள் பம்பைகளியம்ப
பன்னி நடையென்ன மென்ன மின்னிடை நடந்தாள்
மின்னும் மணிரெத்தின் விதானப் பலகை மீதே
மெலலென மாந்தளிர் விரித்தனர், மகத்தாய்
கன்னியரும், மன்னவரும் காமனும் ரதியும்போல
160கை பிடி முகிழ்த்த மென்னகண் குளிர நின்றார்.
பொன்னின் குழவியை எடுத்து மடமானர்
பூவை கை கொடுக்க ராசர் தாவியதை வாங்கி
அன்னையர்கள் தாதியர்கள் மூப்பிமார் மகிழ்ந்து
ஆண் பெறுவை யம்மையெனத்தான் குழவிமாத்த
மாற்றலர்கள் அஞ்ச வைகை நாடுகளிகூர
மங்கை யர்க்கு மாலையிட மாளிகையிலிருந்தார்.
கூற்றை உதைசெய்த சொக்கநாதர் அருளாலே
கோது குழல் மாலையம்மை மாதம்பத்து மானாள்.

வேறு


பத்தான மாதமதில பங்கயக் கொடி மாலையம்மை
170மெத்த நாள் மெய் நோவு
மேனித் தாளச்சியைக் கண்ட மன்னன்
இந்தப் பொழுதிலே மன்னன்
ஈத்துப் புரை கட்ட வேணு மென்றான்.
கட்டு மெனச் சொல்லு முன் வெட்டிக்
காட்டுமரங்களைக் கொண்டு வந்து
மட்டுக் குழலார்க்கு

162 - 164 - இது குழந்தைக் காப்புச் சடங்கு. கற்குழவியை மனைவி கணவனிடம் கொடுப்பாள். தோழியர் 'ஆண்' பெறுகவென்று வாழ்த்து 25.