பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வைகை மண்டலம்
ஆள மகன் பிறக்க
இட்ட முகிழ்த்த மதில்
இமைக்குமுன் ஈத்துப் புணர தனைத்தான்.
180பொற் கொடி மெய் நொந்து ழன்று சொள்வாள்
மகன் தான் பிறக்கு மிப்போ,
போய் மருத்துவத்தை கூட்டி வாருமென்றார்.
வருந்து மப்படிகள் கண்டு ஒட்டன்.
வடதாளில் வாழும் மருத்துவத்தை
இருந்து நடக்காமல்
இமைக்கு முன்னே கூட்டி வந்தனனே
வந்த மருத்து வமும்
மறைநூல் விதி லக்கினம்தான் பார்த்து
எந் தாயே மாலையம்மா
190ஏங்காதே பிள்ளை பெறுவாயிப் போ
நொந்தாள் திருவயிறு மெத்த
நொம்பலப் பட்டு வருகுதென்பாள்
சந்துங் குறுக்கும் முட்டுதே
தளர்ந்து முகங்குறுக வேர்த் தொழுகி
வேர்த்தாள், மிகத் தளர்ந்தனளே!
விழுவாள், எழுந்திருப்பாள், மெலிவாள்
அம்மா மயங்காதே
என்றனைப்பாராய் என்று அவயமிடுவார்கள்.
அவையம் பகவதிக்குச் சொக்கர்
200அங்கையற்கண்ணிக்கு அவயமென்பர்
இவள் இப்படி யிரங்க
எல்லோரு மண்ணில் விழுந்தழுந்தார்
மண்ணாள் வானென்று சொல்லி முன்
மகாதேவரிட்ட விதிப்படிக்கு
பெண்ணாள் திருவயிறு நொந்து
பிறக்கும் பிறவி தலை தெரிய

185 இருந்து நடக்காமல் காலந்தாழ்த்தாமல்
187 மருத்துவம் - மருத்துவச்சி, மருத்துவப் பெண்
193 சந்து - பிரிஷ்ட பாகம் குறுக்கு - இருப்பு (இவை இரண்டும் நெல்லை வழக்கு)
192 நொம்பலம் - வேதனை (நெ - வழக்கு).
199 அவையம் - தஞ்சம், பிள்ளை பெறுகிற பெண்ணுக்கு இடுப்பு வலி மிகும் பொழுது தெய்வங்களைப் பெயர் சொல்லி அழைத்து அபயம் என்று கூவுவர். எண்ணங்கள் - எண்கள் .