பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

எண்ணங்கள் சோதிடங்கள்
இருபத்தியேழான ராசி பக்கம்
பக்கமே நவக்கிரகம்
210பஞ்சமி நல்ல சிவயோகம்
ஏற்ற ஒரு முகிழ்த்தம் கொண்டு
உத்திர நாளில் பிறந்தனரே
பிறந்தார் உலகம் தழைத்த
பெண்கள் குரவை யெங்குமிட
இறந்த கால மெடுக்க
வந்த ராக குமாரரென ஏத்துவாராம்,
பூமாது, நாமாது, புவிமாது, வீரத் திருமாது
மா மாது தானம் தழைக்க
மன்னர் பெருமாள் பிறந்தனராம்.
220பிறந்த குழந்தை தன்னை
அஞ்சு பெண்கள் எடுத்து முகத்தணைந்து
அந்த முகிழ்த்த மதில்
சேனை புகட்டிக் கொப்புளறுத்து,
அறுத்தார் குரவையிட்டார்.
அன்பாய் மருத்துவமே செய்திடவே
நிறுத்தார் அவள் எடையில்
பொன் நிதியும் கொடுத்தார், இதை கூலியும்
இரை யேத்தங் கண்டதன் பின்
ராச பெருமாள் திரு மகனே
230கரையேத்தும் பூங்குழலாள்
நன்னீராட்டிப் பொட்டுமிட்டு
பொட்டிட்டு நகையுமிட்டு
புதல் வனழகெல்லாம் பார்த்திருந்தார்.
முலைப்பால முதளித்து
முகந்து முத்திக் கொஞ்சி மொய்க் குழலாள்
கலைப்பாயின் மேல் கிடத்தி
கண்ணாளர் தொட்டில் சமையுமென்றார்
கண்ணாளர் காவலவர்
காவலனுக்குத் தான் பள்ளி கொள்ள

207 கண்ணாளர் - இங்கு தச்சர் (பஞ்சகருமார்கள்)
215 இறந்த காலமெடுக்க - பிற்கால பாண்டியர்களுக்கு இறந்த கால மெடுத்த பெருமாள் என்ற பட்டப் பெயருண்டு சோழர் வீழ்ச்சிக்குப் பின் தமிழக முழுவதும் ஒன்றுபடுத்தி ஆண்ட பேரரசர்களாக இவர்கள் ஏறக்குறைய 130 ஆண்டுகள் விளங்கினர்.