பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உன்னுடைய மருமகனாம்
உலகாளுங் குலசேகரர்
மன்னர் மணஞ் செய்ய இங்கே
420அவர் விடுத்தார் அடியேனை
அடி தொழுதங்கவணு ரைக்க
அகமகிழ்ந்து வெட்டு மாறன்
“உடையாருடைய படி
ஒருவரையுஞ் சொல்ல வேண்டாம்.
கடுகியே செல்லுமங்கே
கன்யா தானஞ் செய்ய'வென்றால்
என்று மந்த வெட்டுமாறன்
இயம்பு மொழி தனைக் கேட்டு
சென்று வந்து குல சேகரர்
430திரு முன்பிலேது சொல்வார்
“மன்றல் செறி மாலை மார்பா
மன்ன வனே பாண்டியனே
என்று தலை மாலையிட்டே நீ
உறுதிப் பாடுஞ் சொல்லி விட்டார்
சொல்லி விட்ட வார்த்தை தன்னை
மனமகிழக் கேட்ட போது
நல்லதெனக் குலசேகரர்
நளினமுடனேது சொல்வார்
வல்லபடி கலியாணம்
440வரிசை பெற நடத்த வென்ன
கலியாண முகிழ்த்த மிட்டார்.
கலியாண முகிழ்த்த மிட்டுக்
காதலியைக் கைப்பிடிக்கச்
சலியாமல் அரிசி கிடாய்
தயிர் நெய் பாலிளந் தேங்காயும்
பொலிவாகத் தானேத்தி
மரகதக்கால் பந்தலிட்டு
பந்த லிட்டுத் தூண்களெல்லாம்
பவள முத்தால லங்கரித்து
450சந்தனமும் புனுகு பன்னீர்
தரைகளெங்கும் மெழுகிடுவார்

421-430 ஒற்றனையனுப்பி வெட்டு மாறப் பாண்டியனை பெண் கேட்டார்கள். அவரும் சம்மதித்தார்.
419 பகளம்-பவளம். (நெல்லைப் பேச்சு வழக்கு)
451-468 திருமணத்திற்காக நகரை அலங்கரித்தல்