பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

பங்கயம் பொன்னும் போல
சீர் வாய்த் தொன்றாய்க் கலந்து
சிறப்புடன் வாழ்ந்திரு மென்றார்
அந்தணர் வாழ்த்தப் புலவோர்
ஆசு கவி நின்று பாட
நற்றமிழ்ப் பெரியோர்கள்
நடன கீதம் பாடுவாராம்.
520பைந் தொடியும் மன்னவனும்
பள்ளியறை சென்றே புகுந்தார்.
பள்ளியறை மீது மன்னன்
பாவாடை மீதிருத்தி
வெள்ளிரு சானைக் கலந்து
விரித்த பொற் கலமும் வைத்து
பூதக் கலத் தமுதுடனே
பொரி கறி, நெய்யும் படைத்து
ஆதரவோடே களித்து அ
முது பொலிந்தாரே மன்னர்
530மன்னவனாரிப் படியே
மணவாளத் தோழரோடு
அன்னமிட்டுக் கலியாண
மடைவுடனே நடத்திய பின்
ஏழாம் நீர் கூடியபின்
கூட்டமிட்ட படை சேருமிக்
குரு வன்னியர் புடைசூழ
ஈட்டி, வேல் பரிசை குந்தம்
எடுத்து முன்னே சேவிப்பாரும்
சேவிக்கும் பரிகலமும்
540சேனை பரிவாரமதும்
பரவிக் குந்தமடிப்பாரும்
பல்லாக்கு முன்னடக்க
பல்லியங்கள் வெடி திடிமன்
பல குடையுஞ் சேருமிவர்
மல்லியரும் தடம் புயத்தான்
மாமதுரைப் பதியில் வந்தான்
மாமதுரைப் பதியில் வந்து

523 பாவாடை-விரிப்பு
534-547 குலசேகரன் பரிவாரங்களோடு மதுரை வந்து சேர்ந்து தாயை வணங்கினான்.