பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

இதம் பெறு முகப் பணி ரத்தின சங்கிலியும்
எழில் வளரு கெச்சம் விரலணிகளனிந்து
ஆளி லழகன் அதி சூரமன்னன்
அழகு திரு வரையிலரை ஞாண்ப்பட்டையும்
650தாழ விதம் முறை வீரதண்டை வீரக்கழல்
தரிச் சிலம் போடே சிலம் பணிந்தனராம்.
அணிந் தழகு பெறும் ராச குலத்தனையுமரசர்
அபிசேக மணி மாடமது தனி விருத்தி
பணிந்தனர் களபிசேக முடி தனையெடுத்து
பாரேழும் வாழ மறை நால் வேதம் வாழ
மறை யோர்கள் திரு நீறு அஞ்செழுத்தறமும்
மகா தேவர் பூசை, குரு பூசைகளும் வாழ
குறியான சைவ நெறி யாறு சாத்திரமும்
குடியான அடியார்கள் மிக வாழவே தான்
660திரை மேவு திங்களும், மாரி, பல்லுயிரும்
செந்நெல், கன்னல் கார் பிசான மதுவும் வாழ
முறைப் படி அடியார்கள் மறையோர்கள் வாழ
மூத்த குல சேகரர்க்கு முடியெடுத்து வைத்தனராம்.

வேறு.


மூத்த குல சேகரர்க்கு முடி யெடுக்க வேதான்
முதியோர்கள் மங்கலம் பாடவே
நாற்றிசையும் சங்கு முரசு வெடிதிடிமனும்
நாக சுரம் குழலூதவே
வாய்த்த மறை யோர்கள் கவி வாணர்
மகுட, மத்தள கையார்ப் பவே
670ஏத்தி யே இருபுறமும் வெஞ்சாமரமும் ஆலத்தி
ஏந்து வார் மன்னவனைப் பாடுவார்
பாடுவார் கயிலாச வீணை கின்ன கவி
படிப்பார்கள் பலகலைகள் எங்கணும்

அரசனுக்கு அணிவித்த அணிகள்
சங்கிலி, பாகம், கஞ்சவடி, வாகுவலையம் முகப்பணி, கெச்சம் (விரலில்) அரைஞாண் பட்டை, வீரகண்டை,வீரக்கழல், சிலம்பு

660 - 63 மன்னன் முடிசூடும் பொழுது வாழ்த்துக் கூறுகிறார்கள். இங்கு சைவமும், அடியார்களும், சாத்திரங் களும் ஆகமங்களும் வாழ்த்தப் பெறுகின்றன. மழை பெய்து உழவு பெருகவும் வாழ்த்துக் கூறப்படுகிறது.

666 திடிமன் - ஒரு ஊது குழல்

669 மகுடம் - பம்பை போல் ஒர்புறத்தோற் கருவி folk musical instrument.