பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

நீடு வான் மட்டும் அடைய எதிர் வதன
நித்திலக் குடை வெள்ளை வட்டமும்
வெள்ளை வட்டம் பினிபாடை கயர் செருடி
விரி கதி ரோனே மறைந்தார் வரவே
பள்ளிக் குடையும் பவள முத்துக் குடையும்
பச்சை நீலக் குடைகள் சேரவே
680உள்ளுடையர், அகம்படியர், துறைக் காரர்
எட்டார், காளையார் கூட்டமும்
காளாஞ்சி, திருகை பரிசை யுடைவாளும்
கலசப் பானை யேந்தி வருவாரும்
ஆளடி மை தேவாரத்துடன்
அடங்கலு முன்னே சேவிக்கவே
துளசி வான மெட்டுமடையவே, கதிரவன்
சுடரொளி கண்களை மறை க்கவே
வில்லும் வாளும் பரிசைச் சுருகை பட்டயம்
வாண வெடி வான மிடி யென முழங்கவே
690கல் மேல் துவைக்கும் மலையாங்குளத்துப் பரிகள்
கடலொலிகளென அதிர் ந்தார்ப்பவே
கொல்லத்து வித்தாரி சில தொட்டியர் வில்லுடன்
குன்று பரிசை நூல் பரிசை யும்
மலையாள, துளுவர், கன்னடவர்.
கன்னடர், தெலுங்கர் துளுவர் ஆரியர் மச்சர்
கடிய தொட்டியர், மறவர், விலாடரும்,
வன்னியர்கள் செங்கர், கொங்கர் நீள்வங்கவர்
மலை வேடர் மச்சர்களும்
மலை வேடர் ராச மக்களும் அவர்
700என்னிலத் தரசரும் மதுரை கட்டியாளும்
மன்னனே இரு புறஞ் சேவித்து நிக்கவே.
மன்னன் வெட்டு மாறனும் தம்பிஞ்சி மரவிலி
வானுதும் வந்து சேவிக்கவே
சேவித்துச் சித்துாரில் சின்னய் யன் தளவாயும்
சித்த நத்தத்து லிங்கப்பனும்

680-681 ஊர்வலத்தில் வந்த படைகள் உடையார், அகம்படியர், துறைக்காரர் (கடல் துறை மக்கள்) எட்டார் (எட்டைய புரத்தார்.)

693- 702 குலசேகரனைப் பணிந்து அரசாண்டவர்களின் பட்டியல், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய பிற்காலப் பாண்டியர்கள் தமது வெற்றியைக் கூறிக்கொள்ளும் மெய்க் கீர்த்திகளின் போக்கிலேயேயுள்ளது.