பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

காண வந்தாள் ஒருத்தி;
கொண்டாளே கையும் மடலும் பிரயாசை
கொண்டாள் மதன் கனையும்
850திண்டாடி மாதர்கள் இப்படி சேர்ந்து
தெருவில் மையலாக
மண்டலம் போத்தும் வரதுங்க ராமன்
வளையப்பவனி வந்தார்
தொண்டர் தொழுதிடும் ஆலவாய் அட்ட வாசல்
சொக்கநாதர் கோவில் புக்கார்,
தெண்டம் பண்ணிக் காணிக்கை வைத்து
மீளத் தெருவில் எழுந்தருளி
எழுந்து மடவார் இருபுறமும் நின்
றிசல் கவரி வீச
860குளுந்த மலரும் பழுக்காயும் வெள்ளிலை
கொண்டே சொரிந்திடுவார்
அழுந்தப் பிரம்படிக்காரர் நின்று
அடித்து இடமாக்க
அடிக்கனங் கொண்ட எழுமுலையர் இருபுறமும்
ஆலத்தி ஏந்திவர
படிப்பார்கள் சங்கீதம் வீணை பல கலை
பாடிடுவார் சில பேர்.
நடிப்பார்கள் நாடக மாதர்கள்
நாதசுரம் ஊதுவார்;
870நாகங் குடையிட, அந்தணர் வாழ்த்தவே
நாலு தெருவு வந்து
மேக மனையதோர் யானைமேலே நின்று
வேந்தனும் கீழிறங்கி
ஆகமம் களிகூற தம்பிமார் வாழ்த்த
அமைச்சர்கள் புடைசூழ
மாகமடங்கலும் வாழ்த்தவே
மாளியலுக்குள் புகுந்தார்

வேறு


புகுந்தார் ராசனும் கோவிலுள்ளே
பொழுது புகுந்தது தன் கடலினுள்ளே

852 போத்தும்-போற்றும்
859 இசல்-வரிசை
860 குளுந்த-குளிர்ந்த
863 அடித்தே இடமாக்க-வழி விலக்க
876 மாகமடங்கலும்-மனம் நிரம்ப
877 மாளியல் - மாளிகை (பா. வ)