பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

880ஜெகந்தான் மகிழ்ந்திடும் மன்னர் பெருமான்
தெய்வ பூசை குருபூசை நடத்தி
பூசை நடத்தும் அந்தணர் வேள்விக்கும்
புண்ணியத் தினவழி முறை தனக்கும்
ஆசை மிகப்பத்தி உலகு தன்னை
ஆறி லொன்று கொண்டு அரசாண்டான்.
ஆண்டார் அடங்கா தட்டதனை வெட்டி
அணையும் குளங்களும் மிகவே கண்டு
தீண்டாச் சாதி போல் நிலை நிறுத்தி
திருவுஞ் செல்வமும் தான் விளங்க
890அழகு மலைதனில் முகிலெழும்பி
வைகை பெருகியே திசைகள் தோறும்
உழவரும் குழுமியது கொண்டு
உகந்து கலியான விருந்திடுவார்.
இடுவார் பலருண்டு ஏற்பாரில்லை
நடுவு நியாயமும் மிக விளங்க
நாதர் திருநீறு அஞ்செழுத்தும் பேணி
அடைவாய் உலகத்தை ஒரு குடைக்குள்
ஆறிலொன்று கொண்டு அரசாண்டார்
காஞ்சி புர வெற்றி
900ஆண்டங்கிருக்கிற நாளையிலே
அமைச்சர்கள் மன்னனோடேது சொல்வார்;
எண் திசையும் புகழ் படைத்த
இயல் மதுரைக் காவலரே,
கொண்டலொத்த கொடையானே,
குலசேகரப் பெருமாளே
பண்டு முன்னாள் நங்குலத்தில்
பாண்டியர்கள் ஆண்ட சீமை
போயறிய வேணு மன்னா!
பூதலங்கள் மெத்த உண்டே
910நினைவுப்படி சேளுமெல்லாம்
தென்னாஞ்சில் நாடு மட்டும்.
தென்குமரி இப்புறமும்
ராகுத்த தோளானே.

884 பத்தி-பற்றி
885 அரசன்-பங்கு ஆறிலொன்று
886 துட்டதனை-துஷ்டர்களை
894 கொள்வாருமில்லை, கொடுப்பாருமில்லை. (கம்பன்) இல்லா பதரின்மையால், பிச்சை ஏற்பாரில்லை, கற்பனையின் நாட்டை வறுமையில்லாததாகக் கூறுகிறார்
913 ராகுத்தன்- வீரர், விருது,