பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

இதற்கு பிறகு என் நண்பர் ராமச்சந்திர டோகோ அகஸ்தீசுவரம் ஆறுமுகசாமி நாடாரிடமிருந்து ஒரு பிரதியை வாங்கி புதிதாக எழுதவித்து அனுப்பினார். அப்பிரதியில் ஆரம்பத்தில் சில பக்கங்களும், முடிவில் 40 பக்கங்களும் இல்லை. இந்நூலின் மூலத்தை எழுத பல பிரதிகளையும் நான் பயன்படுத்தியுள்ளேன்.

ஆராய்ச்சியுரை

கன்னடியர் படையெடுப்பின் போது பாண்டியர்கள் எதிர்த்துப் போராடிய வரலாற்று நிகழ்ச்சியே ஐவர் ராசாக்கள் கதையின் கருவாகும்.

இக் கதையொன்று மட்டுமில்லாமல் இன்னும் பல கதைகளும் இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டு வழங்கி வந்திருக் கின்றன. "பஞ்ச பாண்டியர் கதை" "வெட்டும் பெருமாள் கதை" "கன்னடியன் படைப்போர்" முதலியன் அவை.

இவையாவும் பலவிடங்களில் பாண்டியரும் கன்னடியரும் போராடியதாகக் கூறுகின்றன. முடிவில் பாண்டியர் உயிர் நீத்ததாகவும் கூறுகின்றன.

எனவே இக்கதைகள் ஒரே ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுவனவல்ல, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த ஆதிக்கப்போராட்டத்தில், சிற்சில பகுதிகளில் நடந்தவற்றை முதன்மைப்படுத்தி, பல்வேறு நிகழ்ச்சிகளையும் கதையோடு பொருத்திக் கற்பனையால் இணைத்துக் கூறுகின்றன.

செவிவழிச் செய்திகளும் தொல்பொருள் சான்றுகளும்

கன்னடியன் பாண்டியன் போர் பலவிடங்களில் நடந்ததாக நெல்லை மாவட்டத்தில் செவிவழிச் செய்திகள் வழங்கி வருகின்றன. அதற்கு ஆதாரமாகச் சிற்சில தொல்பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன.

கயத்தாற்றின் அருகில் வெங்கல ராசனுக்கும், வெட்டும் பெருமாள் ராசாவுக்கும் போர் நடந்ததாகவும், அப்போரில் கயத் தாற்றுக் கோட்டை அழிந்ததாகவும், வெட்டும் பெருமாள் போரில் மாண்டதாகவும் செவிவழிச் செய்திகள் அப்பகுதியில் வழங்கி வருகின்றன. இதற்குச் சில கல் வெட்டுக்களும் இளவேலங்-