கலைஞரின் சட்டமன்ற உரைகள்
உரை : 19
பிரிவினைப் பிரச்சினை
107
நாள்:4.12.1973
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின்மீது என்னுடைய கருத்துக்கள் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். பெரியார் அவர்கள் பிரிவினையைக் கேட்பது இன்று நேற்றல்ல. 1963-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் இயங்கிய அந்தக் காலத்தில் பிரிவினைக் கொள்கையை விட்டுவிட்ட பிறகும் பெரியார் தொடர்ந்து பிரிவினையை வலியுறுத்தி வந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் பெரியார் அவர்கள் திராவிட
முன்னேற்றக் கழகத்தை ஆதரித்துக்கொண்டிருக்கவில்லை என்பது மாத்திரமல்ல, மாறாக, காங்கிரஸ் கட்சிக்கு பேராதரவு நல்கி வந்தார்கள். அப்பொழுது காங்கிரஸ் ஒன்றாக இருந்த நேரம். அந்த காலத்தில் முதலமைச்சராக காமராசர் அவர்கள் வீற்றிருந்த போதும், தொடர்ந்து பக்தவத்சலம் அவர்கள் வீற்றிருந்தபோதும், பெரியார் அவர்களுடைய ஆதரவை காங்கிரஸ் கட்சி பெற்றிருந்தது. தேர்தல் நேரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக பெரியார் அவர்களுடைய பெரும் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்குப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சி பெரியாருடைய கொள்கைகள் அனைத்தையும் ஒத்துக்கொண்டதா என்றால், இல்லை. பெரியார் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கறார். ஆனால், காங்கிரஸ் கட்சி பெரியாருடைய எல்லா கொள்கைகளையும் ஒத்துக்கொள்ள வில்லையென்று அன்றைக்கிருந்த முதலமைச்சர் காமராசர் அவர்களே எடுத்துக்கூறி இருக்கிறார்கள். அப்பொழுதும் பெரியார் அவர்கள் பிரிவினை பேசினார். தன்னுடைய