108
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
பத்திரிகையில் பிரிவினையைப்பற்றி எழுதினார். அவர் நடத்திய ஊர்வலங்கள்-இப்பொழுதாவது ஊர்வலங்கள் நடைபெறு கின்றன- காங்கிரஸ் கட்சி ஆண்டபொழுது சிலைகள் உடைக்கப்பட்டன. பிள்ளையார் சிலையை உடைப்பதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டன. அப்பொழுது காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். நான், காமராசருக்கு இதிலே சம்பந்தம் உண்டு என்று சொல்லவில்லை. பிள்ளையாரை உடைக்கவேண்டுமென்று சொன்ன பெரியாரோடு தொடர்பு கொண்டிருந்தார். அப்படி தொடர்புகொண்டிருந்த காரணத் தினாலே, காமராசரும் பிள்ளையார் உடைக்க சம்மதம் கொடுத்து விட்டார் என்று அர்த்தம் அல்ல. ஆகவே, இந்தப் பிரச்னையை அணுகுகிற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழக அரசை குறை சொல்கிற நோக்கத்தோடு இந்தப் பிரச்சனையை தயவு செய்து அணுகக்கூடாது என்று நான் முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியிலிருந்து வந்துள்ள ஒரு கடிதம்பற்றிப் பேசப் பட்டது. அதற்கு ஏன் இன்னும் பதில் எழுதவில்லை என்றுகூடக் கேட்கப்பட்டது. ஏற்கனவே கேரள மாநிலம் பற்றி இங்கே ஒரு பிரச்னை வந்தபொழுது நான் ஒரு விவரம் சொன்னேன். 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள முதலமைச்சருக்கு எழுதப் பட்ட கடிதத்திற்கு ஆகஸ்டு மாதம் பதில் வந்தது என்று குறிப் பிட்டேன், இதை நான் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை. அதைப்பற்றி ஆராய்ந்து விவரங்களைச் சேகரித்துக் கடிதம் எழுத நாட்கள் அல்ல மாதக் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டது. அதைப்போல் டெல்லியிலிருந்து மாநில அரசுக்கு உடனடியாகப் பதில் வந்து விடுவதும் இல்லை.
24ஆம் தேதியன்று டெல்லியிலே உள்ள அடிஷனல் செகரட்டரியிடமிருந்து நம்முடைய தலைமைச் செயலாளருக்கு கடிதம் வந்தது, பெரியார் பிரிவினைக்கொள்கைமீது தமிழக அரசு கேட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் கடிதம் எழுதப் பெற்ற அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே புதுடெல்லி நாடாளுமன்றத்திலே இந்தப் பிரச்னை எழுந்தபோது உள்துறை அமைச்சர் உமா சங்கர் தீக்சித், ஈ.வெ.ரா. பிரிவினை