கலைஞரின் சட்டமன்ற உரைகள்
109
கேட்பதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கமாட்டேன் என்று சொல்கிறவர்கள் மாநில அரசுக்குக் கடிதம் எழுதி முக்கியத்துவம் அதற்குத் தரவேண்டுமென்று வற்புறுத்த மாட்டார்கள் என்று அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என்று அவர்களே கூறியபிறகு மாநில அரசு அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்பது பெரிய பிரச்னை ஆகும்.
பிரதம அமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் தென்னகம் வந்த போது நிருபர்கள் சந்தித்துக் கேட்டபோது அவர்களும் இது போன்ற பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தைத் தடைசெய்யவீர்களா என்று கேட்டதற்கு அந்தக் கட்சி தடைசெய்கின்ற அளவிற்கு பலம் வாய்ந்ததா என்று எதிர்க் கேள்வி பதிலளித்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இங்கே எழுப்பப்பட்டது. பிரிவினைக்கொள்கைமீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்பது ஆகும். அது மட்டுமல்ல, அமைச்சர்கள் பெரியார் அவர்கள் நடத்துகின்ற கூட்டங்களிலே கலந்துகொள்கிறார்களே அது பற்றியும் கேட்கப்பட்டது. பிரிவினை கேட்டுப் பெரியார் நடத்து கின்ற கூட்டங்களிலே அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை; சமுதாய சீர்திருத்தம், பெரியார் சிலைத் திறப்பு விழா ஆகிய கூட்டங்களிலேதான் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள் கிறார்கள், சில நேரங்களிலே நான்கூட கலந்து கொண்டிருக் கிறேன். நாங்கள் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வேறு இடங் களுக்கு சென்றதற்குப் பிறகு பெரியார் அவர்களோ அல்லது மற்றவர்களோ பிரிவினை பற்றிப் பேசியிருக்கலாம் அப்பொழுது கூட நாங்கள் அங்கு இருந்ததால் அந்தக் கருத்துக்கள் எங்களுக்கு ஒத்த கருத்துக்கள் அல்ல என்று பதில் அளித்திருக் கிறோம். காமராஜ், பக்தவத்சலம் ஆகியவர்களுடைய காலத்திலேகூட பெரியாருடைய கருத்துக்கள் எங்களுக்கு ஒத்த கருத்துக்கள் இல்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் நாங்களும் பெரியாருடைய ஒன்றிரண்டு கருத்துக்கள் எங்களுக்கு ஒத்த கருத்துக்கள் அல்ல என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.