உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

தனிநாடு கேட்கின்றவர்கள் தடுக்கப்படுகின்றார்களா என்று கே.டி.கே. தங்கமணி அவர்கள் கேட்டார்கள். அதே மதுரையிலே தனிநாடு கோரி ஊர்வலம் நடத்தினார்கள். அவர்களில் 92 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த மாநாட்டிற்கு சிறப்புரையாற்ற பெரியார் அவர்கள் சென்றார்கள். ஆனால் அந்த மாநாடு நடைபெறுவதாக இருந்த இடம் பூட்டப்பட்டு காவல் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. தனிநாடு கோரிவந்த அந்த ஊர்வலமும் தடைசெய்யப்பட்டது, அது மாத்திரம் அல்ல. 92 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆகவே தனிநாடு பிரிவினை என்ற அளவிற்கு முழக்கங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்ற நிலையிலே அவர்கள் உடனடியாகத் தடைசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பெரிய நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை நான் சொல்வதைவிட உள்துறை அமைச்சர் உமா சங்கர் தீக்சித் அவர்கள் சொல்லியிருப்பதும், பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சொல்லியிருப்பதும்தான் காரணங்கள் என்று டுத்துக்காட்டக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

அண்மையிலே சென்னையிலே நடைபெற இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு மாண்புமிகு உறுப்பினர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் முறையிட்டு எனக்கு எழுதியிருக்கிறார்கள். இங்கே யும் கடவுளர் படங்கள், சிலைகள் களங்கப்படுத்தப்படலாம், அதைக் கண்காணிக்கவேண்டுமென்று எழுதியிருக்கிறார்கள். அதைத் திராவிடக் கழக நண்பர்களுக்கு எடுத்துச்சொல்லி இப் பொழுது அந்த ஊர்வலம் கைவிடப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளர்களைப் பெரியார் அவர்கள் தான் களங்கப்படுத்துகிறார்களா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நாட்டிலே உள்ள கோயில்களிலே, புத்தகங்களிலே, கடவுளர்கள் களங்கப்படுத்தப்படவில்லையா, அதைத்தான் பெரியார் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். வேண்டு மானால் என்னுடன் வந்தால், தேவாலயங்களிலேயும், கோயில் களிலேயும் கடவுளர்கள் எப்படி எப்படி களங்கப்படுத்தப்பட் டிருக்கிறார்கள் என்பதை என்னால் எடுத்துக்காட்டமுடியும். அதுகூடத் தேவையில்லை என்ற அளவிற்கு பக்தர்கள் மனதைப்