கலைஞரின் சட்டமன்ற உரைகள்
111
புண்படுத்தவேண்டாம், அவர்களே அந்தச் சிலைகளையும் படங்களையும் பார்த்துக்கொள்ளட்டும், நாம் அவர்களுடைய மனதைப் புண்படுத்தவேண்டாம் என்று பெரியார் அவர்களு டைய திராவிடக் கழகத்திற்கு எடுத்துச்சொல்லப்பட்டிருக்கிறது.
அண்மையிலே பெரியார் அவர்களைச் சந்தித்துப் பேசியதற்குப் பிறகு, அண்மைக்காலத்திலே அவர்களுடைய அறிக்கைகள் அவர்கள் பிரிவினை கேட்கவில்லை என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. சமத்துவம், சாதிமதபேதமற்ற சமுதாயத்தை அமைக்க வழிவகுக்கின்ற தன்மையிலே இப்பொழுதுள்ள அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், இல்லாவிட்டால் பிரிவினை கேட்பேன் என்றுதான் காரணமாகச் சொல்கிறார்கள். இதுவே நல்ல அறிகுறியாகும். அவர்களுடைய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இல்லாவிட்டாலும், அவர்கள் பெரியவர்கள், இந்த நாட்டுக்காகப் பல ஆண்டுக்காலம் உழைத்த வர்கள். பங்களாதேஷ் போராட்டத்தின்போது தமிழ்நாட்டிலே உள்ள ஒருவர் பாகிஸ்தானை ஆதரித்து அறிக்கைவிட்ட நேரத்திலே அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு நான் என்ன பதில் சொன்னேனோ அதே பதிலை ல இப்போதும் சொல்கிறேன் என்று கூறி இந்த அவையை அதற் காக ஒத்திவைக்கத் தேவையில்லை என்று கூறி அமைகிறேன்.
திரு. கே.டி.கே. தங்கமணி: மத்திய சர்க்கார், மாநில சர்க்காருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதே, அதற்கு பதில் கொடுக்கப்படுமா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: 24ஆம் தேதியன்று கடிதம் எழுதியிருக்கிறார்கள். சிலர் மாதக்கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் பதில் எழுத. நான் கேரள மாநிலத்தி லிருந்து வந்திருந்த பதிலைப்பற்றிக்கூடக் குறிப்பிட்டேன். மத்திய அரசு, இன்னும் சொல்லப்போனால் சோஷலிஸத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற முறையிலே வேண்டுகோள்கள் பற்றி பதில் எழுதாமல் வருடக்கணக்கிலேகூட அங்கே தேங்கிக்கிடக்கின்றன. அந்தக் கடிதம் நவம்பர் 24ஆம் தேதி எழுதப்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு 27, 28ஆம் தேதியில்,