கலைஞரின் சட்டமன்ற உரைகள்
உ
55
அது மாத்திரமல்லாமல் இது ஏதோ பிரிவினை முழக்கத்தின் அடிப்படையோ என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்களுக்கு பதில் அளிக்கத்தக்க விதத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு பிரிவினை நோக்கம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவே இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக, இந்தக் கொடிப் பிரச்சினையை பிரிந்து போகவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணத்தையும் அடிப்படையாக வைத்து இதனை நாம் எண்ணிடவில்லை என்பதற்கு ஏற்பத்தான் நாம் கொடியின் அமைப்பையும் உருவாக்கினோம். கொடியின் அமைப்பு இந்த விதமாகத்தான் இருக்கும். (கொடியின் படத்தைக் காண்பித்தார்கள்.) இதுதான் நம் மாநிலத்திற்கு என்று நாம் கேட்டிருக்கிற தனிக் கொடியாகும், இதில் ஒரு பகுதியில் இந்திய தேசியக் கொடியும் இன்னொரு பகுதியில் நம்முடைய தமிழ் நாடு அரசின் சின்னமும் இருக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இது ஒன்றும் புதிதல்ல என்று பிரதமர் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கேற்ப பிரிட்டிஷ் காமன்வெல்த்திலும் இதைப்போலவே பல கொடிகள், பல மாநிலங்களுடைய அடையாளங்களும் அமையத்தக்க அளவிற்கு யூனியன் ஜாக் ஒரு புறத்திலும் மறு புறத்தில் அந்தந்தப் பகுதிகளுடைய சின்னங்கள் அமைகிற வகையிலும் கொடிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
நமது சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் குறிப்பிட்டதைப் போல் யு. ஸ். ஏ-யில் இருக்கிற கொடிகளின் அமைப்புகள் நிறைய அளவில் இருக்கின்றன. ஸ்விட்ஸர்லாந்த் நாட்டில் அதன் மொத்த மக்கள் தொகை 62 இலட்சம் பேர்கள்தான். அப்படி 62 இலட்சம் பேர்கள் இருக்கிற அந்த சின்னஞ்சிறிய நாட்டில் 25 மாநிலக் கொடிகள் இருக்கின்றன. 25
மாநிலக் கொடிகளும் இவ்வளவையும் சேர்ந்து 'அலா ஸ்விட்ஸர்லாந்த்' சிகப்பு வடிவத்தில் ஒரு கொடி அமைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் ஸ்விட்ஸர்லாந்த் முழுமைக்கும் ஆன தேசியக் கொடியாகும். ஸ்விட்ஸர்லாந்த் நாட்டிலுள்ள மாநிலங்களில் ஒரு மாநிலத்திலுள்ள மக்கள் தொகை 33,000. அவர்களுக்கும் தனியாக ஒரு கொடி இருக்கிறது. இன்னொரு மாநிலத்திலுள்ள மக்கள் தொகை 25,000. அது நித்துவால்டன். அதற்கும் ஒரு கொடி இருக்கிறது. இப்படி ஒரு இலட்சம், இரண்டு இலட்சம்