56
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
12,000 பேர்கள், 25,000 பேர்கள் என்று மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலங்களுக்கு ஸ்விட்ஸர்லாந்தில் தனித்தனி சின்னங்கள் அமைந்த கொடிகள் இருக்கின்றன. இந்தக் கொடிகளோடு ஸ்விட்ஸர்லாந்தில் தேசியக் கொடியும் விழாக் காலங்களில் பறக்க விடப்படுகிறது. ஆனால் தேசியக் கொடி பறக்க விடப்படுகிற கம்பங்கள் சற்று உயர்ந்ததாகவும் அந்தந்த மாநிலங்களின் கொடிகள் பறக்க விடப்படுகிற கம்பங்கள் அதைவிட சற்றுத் தாழ்ந்ததாகவும் இருக்கின்ற வேறுபாட்டைத் தவிர வேறு எந்த வேறுபாடும் இங்கு கிடையாது. அங்கெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசியல் சட்டம் இருக்கிறது. ஆகவே தனித்தனியாக கொடிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறக்கூடும்.
நம் தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று நீண்ட நெடுங்காலமாக நாம் வலியுறுத்தி வருகிறோம். டாக்டர் ஹாண்டே அவர்கள் குறிப்பிட்டார்கள், அண்ணா அவர்கள் இருந்தால் இந்தக் கொடிப் பிரச்சினையை அப்படியே விட்டு விடுவார்கள், ஏனென்றால் முன்பு அவர்கள் நாட்டுப் பிரிவினை விஷயத்தை விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். அண்ணா அவர்கள் மறைகிற நேரத்தில் எழுதிவைத்துவிட்டுப்போன உயில்தான் மாகாண சுயாட்சி சுயாட்சி என்பதாகும். நாங்கள் அந்த உயிலை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி நான் இங்கு விரிவாக பேச விரும்பவில்லை.
ஆனால் இந்தக் கொடியைப் பொறுத்தவரையில் எந்த விதமான பிரிவினை நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தக் கொடியை நாங்கள் கேட்கவில்லை. ஒரு பெரியவர்கூட எழுதியிருப்பதாக அல்லது கூறியிருப்பதாக இன்று காலையில் நான் பத்திரிகையில் பார்த்தேன். ஏதோ சில நாட்கள் இருந்து விட்டுப்போகிறவர்கள் கிடைத்த சிம்மாசனத்தில் சிங்காரமாக அமர்ந்துவிட்டு போகலாமே தவிர, ஏன் இந்த வம்புக்களுக்கு எல்லாம் வருகிறார்கள் என்று கூறியிருப்பதாக ஒரு பத்திரிகையில்