உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

தேவை இல்லை என்ற கருத்தினை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

தனிக் கொடி கேட்பதால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எவ்வித மாறுபட்ட கருத்தும் இந்த அரசுக்குக் கிடையாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன். தேசியக் கொடி இப்போது போலவே எப்போதும் பயன்படுத்தப்படும். அதன் மதிப்பை குறைத்திட வேண்டுமென்ற எண்ணம் இந்த அரசுக்குத் துளியும் இல்லை.

இந்த அரசு, கடந்த ஜூன் மாதத்தில் நமது தேசியக் கொடியை நாம் உத்தேசித்துள்ள மாநில அரசின் கொடியில் சேர்க்க எண்ணியதால், நாம் அனுப்பிவைத்த 'மாதிரி' கொடிக்கு அனுமதி வேண்டு வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது, அதற்கு, நமது பிரதமர் அவர்கள் மற்ற மாநில முதலமைச்சர்களை எல்லாம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப் போவதாக இந்த அரசுக்குப் பதில் அளித்துள்ளார்கள்.

நாம் உத்தேசித்துள்ள மாநில அரசின் கொடியில் நமது தேசியக் கொடி ஒரு பகுதியிலும், நமது மாநில அரசின் சின்னம் மற்றொரு பகுதியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாகவும், இந்திய அரசியல் சட்டப்படியும் தனிக் கொடி வைத்துக்கொள்வதை மறுப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் எவ்வித இடமுமில்லை என்பதை நான் இந்த மாமன்றத்திற்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். நாம் உத்தேசித்துள்ள மாநிலக் கொடியில் தேசியக் கொடி இடம் பெறுதல் கூடாது என்று மத்திய அரசு தீர்மானிக்குமேயானால் நமது மாநிலத்திற்கு எத்தகைய கொடியை அமைப்பது என்பது பற்றி பிறகு நாம் யோசிக்கலாம்.

சுவிட்ஸர்லாந்து, மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, போன்ற பெடரல் ரிபப்ளிக் முறையுடைய நாடுகளிலெல்லாம் அந்த பெடரேஷனைச் சேர்ந்த அங்கங்கள் தனிக் கொடி வைத்துக் கொண்டுள்ளன என்பதை இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.