60
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்
அ
உரை : 11
நாள் : 03.09.1970
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, தமிழரசுக் கழகத் தலைவர் அவர்கள் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானத்தைப் பற்றி, கொண்டு வந்த நாள் அன்றும், இன்றும் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உட்பட மாண்புமிகு உறுப்பினர்கள் பலர் விவாதத்தில் கலந்து கொண்டு, கருத்துக்களை எல்லாம் வெளியிட்டார்கள். நான் அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் இங்கு விரிவான ஒரு உரையை நிகழ்த்த விரும்பவில்லை. ஏனென்றால், நான் தமிழரசுக் கழகத் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொள்ள விரும்புவ தெல்லாம், பொதுவாக இந்தத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்ளப் போகிறேன். வலியுறுத்த வேண்டாம் என்பதற்குக் காரணம் அந்தத் தீர்மானத்தினுள் பொதிந்திருக்கிற கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையல்ல என்பதால் அல்ல. அந்தக் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளுகிறேன்.
மாநில சுய ஆட்சி என்று அவர் குறிப்பிட்டிருப்பது, மத்தியிலே மேலும் மேலும் அதிகாரங்கள் குவிவதைத் தடுக்க வேண்டுமென்று அவர்கள் கோடிட்டுக் காட்டியிருப்பதும், அதிகாரங்கள் பரவலாக ஆக்கப்பட வேண்டுமென்று, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருப்பதும், திராவிட முன்னேற்றக் கழகத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களாகும். கழகத்தின் சார்பில் நடைபெறுகின்ற இந்த ஆட்சி அதனை வலியுறுத்தி வருகின்ற காரணத்தாலே எந்தெந்த திட்டவட்டமான அதிகாரங்கள் நாம் பெறமுடியும், பெறுவதற்கான வாய்ப்புக் கூறுகள் இருக்கின்றன,