78
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
எங்கு கலவரம் நடந்தாலும் அதை ஒரு மணி நேரத்தில் எங்களுடைய தொண்டர்கள் சென்று அடக்குவார்கள் என்று 6ந் தேதி அவருடைய அறிக்கை வருகிறது. ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் கலவர எண்ணங்கள் நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கி விட்டன என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. டாக்டர் ஹாண்டே அவர்கள், அவர்களுடைய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தாக்கப் பட்டதாகக் குறிப்பிட்டார்கள். என்னிடத்தில் இருக்கிற பட்டிய லைப் பார்த்தால் முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் தான் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஆம்பூர் போன்ற இடங்களில் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக வாக்களித்தவர்களை முஸ்லீம் மக்களை தாக்கி, அவர் களுடைய வீடுகளையெல்லாம் தீயிட்டும் சேதப்படுத்தியும் இருக்கிறார்கள். முஸ்லீம்களுடைய குடிசைகள் எல்லாம் தீயிடப் பட்டு, சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
18-3-71ல் தஞ்சை மாவட்டத்திலே உள்ளூர் என்ற ஊரின் பஞ்சாயத்தின் தலைவர்- திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்- கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்படியான நிகழ்ச்சிகள் முற்போக்குக் கூட்டணித் தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் சில சம்பவங்கள் அந்தத் தரப்பிலும் நடைபெற்றிருக்கலாம். ஆனால் காவல் துறை யினர் பார்த்துக்கொண்டிராமல்
கையைக்கட்டிக்கொண்டு
அவ்வப்போது ஏற்ற நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக் கிறார்கள். வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னரே எப்படி எப்படி காவல் துறை நடந்துகொள்ள வேண்டுமென்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைத்துப் பேசி, சுமுகமான சூழ் நிலையை உண்டாக்குவதற்கு எவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டுமென்பது குறித்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அதன் படியே காவல் துறையினரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் கலந்து பேசி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ