கலைஞரின் சட்டமன்ற உரைகள்
சிமெண்டுத் துறை
பொதுச் சரக்குத் துறை
..... 1
....... 1
கப்பல் பழுது பார்த்தல் சரக்குத் துறை..... 1
85
இப்போதைக்கு இவற்றில் ஆழம் 32 அடியாக இருக்கும். பின்னர் 35 அடி அளவிற்கு இவற்றை ஆழப்படுத்த முடியும். பிற்காலத்தில் உரத் துறையில் மேற்கொண்டு போக்குவரத்து ஏற்படுவதையொட்டி உரத் துறைக்காக மேலும் ஒரு இட வசதி ரூ.1.6 கோடி செலவில் கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திட்டக் குழுவின் போக்குவரத்துப் பிரிவின் தலைமை அதிகாரியான திரு. லூத்ராவும் முன்னாளைய காரியதரிசி திரு.திருமலை, ஐ.ஏ.எஸ். அவர்களும் சேர்ந்து தயாரித்த அறிக்கையின்படி, இத்துறைமுகத்தின் வழியாக கீழ்க்கண்ட அளவு போக்குவரத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:-
1971-72 ...... 1975-76...... 1980-81....
22.35 லட்சம் டன்.
35.10 லட்சம் டன்.
44.20 லட்சம் டன்.
இத்திட்டத்திற்கு 1971 மே மாதம் முடிய ரூ.16.827 கோடி (மொத்தம்) செலவாகியுள்ளது. 1972-ம் ஆண்டு அக்டோபர் திங்களுக்குள் இரண்டு கப்பல்கள் தங்குமிடங்களையும் 1973 மார்ச் திங்களுக்குள் மற்ற இரண்டு கப்பல்கள் தங்குமிடங்களையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தெற்கு அலைத் தடுப்புப் பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் டன் கற்களும் வடக்கு அலைத் தடுப்புப் பகுதியில் நாள் ஒன்றுக்குச் சுமார் ஒரு ஆயிரம் டன் கற்களும் போடப்படுகின்றன. திட்டமிட்ட நாளுக்கு முன்பாக இத்திட்டத்தை முடிப்பதற்காகக் கற்கள் போடுவதின் அளவை நாள் ஒன்றுக்கு 5,000 முதல் 6,000 டன் வரை அதிகரிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. போதிய அளவு நிதி ஒதுக்கீடு கிடைத்தால் இத்திட்டம் 1972-73-ல் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேது சமுத்திரத் திட்டம்:-இந்தியாவின் மேற்குக் கரையையும் கிழக்குக் கரையையும் இணைக்கும் கடற்பாதையை மேம்படுத்துவதற்காகவும், அதன் நீளத்தைக் குறைப்பதற்காகவும், மன்னார் வளைகுடாவை வங்காள விரிகுடாவுடன் இணைப்பதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் நோக்கமாகும்.