உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மு

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

1965-ம் வருடம் மே மாதம் இந்திய அரசினால் நியமிக்கப் பட்ட தலைமைப் பொறியாளரும், திட்ட ஆலோசகருமான திரு. சி.வி.வேங்கடேஸ்வரன் இத்திட்டம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை நடத்தினார். ஆய்வுகளை முடித்து இதுகுறித்து இவரும் முன்னாளைய திட்ட அதிகாரி திரு.ஆர்.நடராசன், ஐ.ஏ.எஸ்., அவர்களும் சேர்ந்து தயாரித்த விரிவான அறிக்கை ஒன்றை முன்னாளைய இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. கே. ஆர். வி. ராவ் அவர்களிடம் 1968-ம் ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பித்தனர். இவ்வறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியிலும், தொழில் நுட்ப வகையிலும் இயன்ற ஒன்றாகும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. பல இணைப்புகளை ஆராய்ந்ததில் இராமேஸ்வரம் இணைப்பும் மண்டபம் இணைப்பும் சிறந்தவை என்று கண்டறியப்பட்டது. இவ்விரண்டு இணைப்புகளில் இராமேஸ்வரம் இணைப்பில் நீளமும் செலவும் குறைந்ததாக இருக்கிறது. எனவே இராமேஸ்வரம் இணைப்பே சிறந்தது என்று இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டின் திட்ட மதிப்பீடு முறையே ரூ.37.50 கோடி, ரூபாய் 55.00 கோடியாகும். திட்ட அறிக்கையைக் கூர்ந்து நோக்கினால் இத்திட்டம் தொழில் நுட்ப வகையில் இயன்ற ஒன்றாகும் என்பதும், பொருளாதார வகையில் சாத்தியமானது என்பதும், வியாபார ரீதியில் இலாபகரமானது என்பதும், அரசியல் ரீதியில் மதிநுட்பம் வாய்ந்தது என்பதும் சந்தேகத்திற்கிடமின்றிப் புலனாகும்.

இத்திட்டம் பேராசையானது என்றும், பொருளாதார ரீதியில் இயலாத ஒன்று என்றும் “மக்கள் சபை மதிப்பீட்டுக்குழு” குறிப்பிட்டுள்ளதென்று சொல்லப்பட்டது. இது இப்பொழுது கூறியதல்ல, 1969-ல் சொல்லப்பட்டது. அதற்குப்பின் நிலை எவ்வளவோ மாறிவிட்டது. அப்பொழுது "மெட்ராஸ் ஔட்டர் ஆர்பர்” திட்டமோ அல்லது தூத்துக்குடித் துறைமுகத் திட்டமோ இதில் ஏதாவது ஒன்றுக்குத்தான் அனுமதி வழங்க முடியுமென்று மத்திய அரசு கூறிற்று. ஆனால் இந்த அரசின் முயற்சியால் இவை இரண்டிற்குமே அனுமதி பெறப்பட்டு, இப்பொழுது வேலை நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேது சமுத்திரத் திட்டம் முடிந்தவுடனேயே அதிக வருவாயுள்ளதாக அமைவதுடன், பின்வரும் ஒவ்வொரு