உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

87

ஆண்டிலும் இரட்டிக்கக்கூடியதுமாகும். இதனால் கிடைக்கக்கூடிய வருவாயில் பெரும் பங்கு அயல்நாட்டு நாணய மாற்றாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு திருஆதித்தனாரும், பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சாதிக் பாட்சாவும், மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. இராஜ்பகதூர் அவர்களுடன் நேரில் கலந்துரையாடியதில் மத்திய அமைச்சர் இத்திட்டத்திற்குப் பேராதரவு தருவதாகவும் வாக்களித்துள்ளார் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்திற்கும் தகுந்த முதன்மையிடம் அளிக்குமாறு மத்திய அமைச்சர் திரு. சுப்பிரமணியம் அவர்களையும் இவ்வரசு கேட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை அனுமதித்து விவாதித்திடத் தேவையில்லை என்பதைத்

தெரிவித்துக்கொள்ளுகிறேன்.