சு. சமுத்திரம்
111
அதிரடிச் சிகிக்சையைத் தந்துவிட்டன. ஒன்னுள் இருந்த சிறுவன், ஒரே சமயத்தில், ஒரேயடியாய் பெரியவனாகி விட்டான். நீ, அந்த விடுதிப் பயல்களோடு நடத்திய போராட்டம் இருக்குதே... அது வெறும் ஆண்மையல்ல... பேராண்மை. இப்பவே, ஒன் மனதில் ஒன்னைப் பற்றி ஒரு உயர்வான எண்ணம் வந்திருக்குமே. எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற மனப்பான்மை வந்திருக்குமே. நான் சொல்றது சரியா? வாயைத் திறந்து பேசுறது. இப்படித் தலையாட்டினால் எப்படி.”
“சரிதான் டாக்டர்...”
“கேட்கிறதுக்கு சந்தோஷமாய் இருக்குது. ‘நான் “வயதுக்கு” வந்த வாலிபன். மிஞ்சேன்; அஞ்சேன்; கெஞ்சேன். என்னால், செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியும்’ என்று பலதடவை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். இதுக்கு ஆட்டோ சஜ்ஜஸ்ஷன்னு பேர்... தேவைப்பட்டால், உறிப்னாடிக் சிசிக்கை கொடுக்கேன். ஆனால், அது உங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கேன் கடைசியாய் ஒரே கேள்வி. கமர்ஷியல் செக்ஸ் ஒர்கர்ஸ்கிட்டே போனதுண்டா...”
“அப்படின்னா...”
“விலைமாதர். இந்தப் பெண்கள் பாவிகள் அல்ல. பாவப்பட்டவர்கள். இவர்களில் பலர், தங்கள் விருப்பத்துக்கு விரோதமாய், அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். அதனால்தான், இந்தப் பெயர் மாற்றம். சரி... போனதுண்டா?”
“எல்லாம் கடற்கரை வரைக்கும்தான். எல்லை தாண்டல...”
“குட். எதுக்கு கேட்டேன்னா... விலை மாதருக்கு, சாரி... ஒரு பாலியல் விற்பனைப் பெண்ணுக்கு, சலிப்பு வரும்போதோ அல்லது குற்ற உணர்வு கூடும்போதோ, நிர்வாணமாகிறவனை உற்றுப்பார்ப்பாள். பிறகு, திடுக்கிட்டதுபோல் பாவலா செய்வாள். அப்புறம், ‘நீ ஆம்பிளையே இல்ல... போய்யா... தம்மாத்துண்டு’ன்னு துரத்துவாள். இதனாலேயே பலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கு...”
மனோகர், அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் பேச்சை முடித்து மறு பேச்சைத் துவங்குமுன்பு, அரைகுறையாகச் சொன்னான்.
“சுய சேர்க்கையாலே, ஏடாகூடமாயிடுமுன்னு மயிலாப்பூர்ல, ஜெகன்நாதன்னு ஒரு சித்த வைத்தியர் சொன்னார்.”
“ஓ! அவரா... எங்க பெரியப்பாதான். என்னக் கூடத் திட்டுவார். இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு, சுய சேர்க்கை ஆபத்துன்னு.