பக்கம்:ஒத்தை வீடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 117 "வாழ்த்துக்கள் மேடம் உங்கள் மனோவுக்கு, உடம்பு ரீதியில், எந்த குறையும் கிடையாது. ஒரு சராசரி ஆண்மகனுக்கு உள்ள அத்தனை உடலியல் நிறைவுகளும் அவருக்கு இருக்குதாம். மனம் கூட, இப்போது பாலியல் பயம் இல்லாமல் போய்விட்டதாம். ஆனாலும், பறவை போனாலும், கிளை ஆடுவதைப்போல சில காலத்திற்கு தடுமாறத்தான் செய்யும். அப்போது, நீங்கள்தான், தாங்கிக் கொள்ளவேண்டும் - இரண்டு விதத்திலும். சரியா..?" சங்கரி, நகத்தை கடிப்பதை விட்டுவிட்டு, அவளை புன்முறுவலாய் பார்த்தபோது, "ஒகே குட்லக் என்று சிரித்தபடியே வசந்தி, போய்விட்டாள். /42 சங்கரி, மீண்டும் நகங்களைக் கடித்தாள். விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். வாசல் பக்கம், பட்டும் படாமலும் கண் போட்டாள். அது பயத்தாலா, பாசத்தாலா என்பது அவளுக்கே புரியவில்லை. அவன் கேட்ட, கேட்கத்தகாத கேள்விகள் இன்னும் மனதைக் குத்தின. இத்தனை கேள்விகளுக்குப் பிறகும், அவனுடன் வாழ வேண்டியது தேவையா என்று ஒரு கேள்வி. அதே சமயம், பெற்றோரைத் திட்டிய அம்மாவை, அவன் அதட்டியதும், அவர்களைத் தனது சிகிச்சைக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று தடுத்து, தானே அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டதும், அவளுக்கு ஒரு இனிமையான நினைவாக வந்தது. இரு வித நினைவுகளும், அவளை இருபக்கமாக இழுத்தன. பழைய நரகம் மீளுமோ, புதிய சொர்க்கம் கிடைக்குமோ. இப்போது, அவள், அந்த அறை வாசலை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். மனோகரைக் காணவில்லை. மனம் பட படத்தது. எழுந்து அறையில் உலாவினாள். டீப்பாயிலிருந்து கீழே விழுந்த ஒரு வெண்கல டம்ளரை, எடுத்து மேஜையில் வைத்துவிட்டுத் திரும்பியபோது. மனோகர், அவள் எதிரே நின்றான். கைகளைக் குறுக்காய்க் கட்டி, அவளை அவ்வப்போது பார்த்துப் பார்த்து தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/118&oldid=762170" இலிருந்து மீள்விக்கப்பட்டது